Traffic Diversion For Prime Minister Modi Of Visiting Chennai To Inaugurate The Khelo India Youth Games 2024 | Traffic Diversion: சென்னை வரும் பிரதமர் மோடி! நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை வரும் பிரதமர் மோடி:
 பெங்களூருவில் இருந்து நாளை மாலை 4 மணிக்கு  புறப்பட்டு 4.45 சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் படைதளம் செல்லும் பிரதமர் மோடி,  அங்கிருந்து  ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு காரில் செல்கிறார்.
அங்கு இந்தியா இளைஞர் விளையாட்டு – 2023 ஐ  (Khelo india) துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 8 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குவார். ஜனவரி 20 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்கிறார். 
போக்குவரத்து மாற்றம்:
இந்த நிலையில், பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை  போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைபடுத்தப்படும்.

அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு, ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சகட்ட பாதுகாப்பு:
பிரதமர் மோடியின் வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னயில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Source link