சவால்களுக்கு மத்தியில் மயிலாடுதுறை வேட்பாளரான சுதா ராமகிருஷ்ணன் – யார் இவர்?
இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. மேலும் படிக்க..
”ஆன்மீகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்” – சுவாமி ஸ்மரணானந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், “ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ், ஆன்மீகம் மற்றும் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எண்ணற்ற இதயங்களிலும் மனங்களிலும் அழியாத தடம் பதித்தவர். அவரது இரக்கமும் ஞானமும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். பல வருடங்களாக அவருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. மேலும் படிக்க..
வீட்டுக்காக உழைப்பவர்கள் தி.மு.க.! நாட்டுக்காக உழைப்பவர்கள் அ.தி.மு.க. – எடப்பாடி பழனிசாமி பரப்புரை
நெல்லை டவுண் வாகையடி முக்கில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க..வுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. எளிதில் அணுகக் கூடியவன் நான். அ.தி.மு.க. ஜனநாயக அமைப்பு உள்ள கட்சி. அதனால் தான் நான் இங்கு பெரிய பதவி பெற்று இருக்கிறேன். மேலும் படிக்க..
திருப்பத்தூர் மக்களுக்கு அமைச்சர் உதயநிதி அளித்த ஸ்பெஷல் வாக்குறுதி.. என்ன தெரியுமா?
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு, ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது. மேலும் படிக்க..
மேலும் காண