top news India today abp nadu morning top India news March 2024 know full details



”நாளை ஸ்டாலின் சிறையில் அடைக்கப்படலாம்” – ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் அதிஷி எச்சரிக்கை

பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதாக, அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் ஆம் ஆத்மி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி சார்பில் நடைபெற்ற ஷிகர் சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில், டெல்லி அமைச்சர் அதிஷி பங்கேற்றார். மேலும் படிக்க..

இன்று வெளியாகிறது இறுதி வேட்பாளர்கள் பட்டியல் – தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் கடும் போட்டி?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும்,  இறுதி வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புபோர் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 27ம் தேதியுடன் முடிவடைந்தது. அததொடர்ந்து, 28ம் தேதியன்று அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களிடன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் படிக்க..

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்கள் – அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

பாதிக்கப்பட்ட கப்பல் வெள்ளிக்கிழமை கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே,  இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களை அரபிக்கடலில் துரத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கடத்தப்பட்ட கப்பலை துரத்திச் சென்று சுற்றி வளைத்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, கடத்தப்பட்ட கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் படிக்க..

பீகாரில் பா.ஜ.க.வுக்கு சவால் விட தயாரான I.N.D.I.A கூட்டணி – தொகுதி உடன்பாடு ஓவர்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது ஜூன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் படிக்க..

அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடி வேலை செய்கிறார் – அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்

இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை அறிமுகப்படுத்தி கூட்டணி கட்சியினர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் இறுதியாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். மேலும் படிக்க..

மேலும் காண

Source link