Top News India Today Abp Nadu Morning Top India News January 18 2024 Know Full Details


அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை.. இன்று முதல் சிறப்பு சடங்குகள் தொடக்கம்!

அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவமான ஸ்ரீ ராம்லல்லாவை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்கின்றன. வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) ராமர் கோயில் கருவறையில் ராம்லல்லா சிலை நிறுவப்பட்டது. இதற்காக, நேற்று (ஜனவரி 17), விவேக் சிருஷ்டி அறக்கட்டளையின் டிரக் உதவியுடன் சில அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலையை வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது. மேலும் படிக்க..

சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..

முடிந்த பொங்கல் ஹாலிடே! சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள் – பெருங்களத்தூரில் நெரிசல்!

பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னையை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் படையெடுக்க தொடங்கினர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் படிக்க..

சென்னை டூ கன்னியாகுமரி! அயோத்திக்கு பாயும் சிறப்பு ரயில்கள்…இந்தியன் ரயில்வே செம்ம பிளான்!

தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த இந்துக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் மோடி கோயில் கருவறையில் சிலையை பிரதிர்ஷ்டை செய்ய உள்ளார்.மேலும் படிக்க..

“புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வு” – ஜல்லிக்கட்டு குறித்து வியந்து ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

 தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம், எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று முடிந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் படிக்க..

Source link