top news India today abp nadu morning top India news February 6 2024 know full details | Morning Headlines: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டி



பயோமெட்ரிக்கில் கைரேகை உறுதி செய்யாவிட்டால் ரேசன் அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி

குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கவும், பொங்கல் பரிசு போன்ற அரசின் பல திட்டங்களை அணுகவும் குடும்ப அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கடைகள் புழக்கத்தில் உள்ளன. அதில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என பல விதங்கள் உள்ளன.  மேலும் படிக்க..

எதிரிகளின் ஏவுகணைகளை துள்ளியமாக குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. சிறப்பம்சம் என்ன?

வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, அதன் வானூர்தி வளர்ச்சி ஸ்தாபனத்தால் ‘அபியாஸ்’ வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் சோதனை ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அபியாஸ் காண்பதற்கு சிறிய ரக விமானம்போல இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அபியாஸ் எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

மக்களவைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், அதிமுகவின் கடந்த கால வரலாற்றில் எங்களுக்கு மிகவும் முக்கிய பங்கு இருந்துள்ளது. மேலும் படிக்க..

சரமாரியாக விமர்சித்த பிரதமர் மோடி! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசினார். மக்களவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தனது பேச்சில், எதிர்க்கட்சியினர் மக்களவைக்கு பதில் மாநிலங்களவைக்கு செல்ல விரும்புவதாக கேள்விப்பட்டதாகவும், காங்கிரஸ் தன்னை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை குறைந்தவர்களாக கருதுவதாகவும், காங்கிரஸ் கனவு காணும் திறனை கூட இழந்துவிட்டதாகவும், வரும் தேர்தலில் 400 தொகுதியில் வெற்றி பெறும் எனவும் பிரதமர் மோடி பேசினார். மேலும் படிக்க..
 
 

மேலும் காண

Source link