ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
PM Modi: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி – பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். பல்லடத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்றார். அங்கு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமைக்கப்படும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் படிக்க
அடுத்த ட்விஸ்ட்க்கு ரெடியாகுங்க! இமாச்சல பிரதேசத்தில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு?
இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். மேலும் படிக்க
“நாட்டுக்கான எனது முதல் வாக்கு” முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை “நாட்டுக்கான எனது முதல் வாக்கு” பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார். மேலும் படிக்க
Gaganyaan: ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள 4 இந்தியர்கள் – விவரங்களை வெளியிட்ட பிரதமர் மோடி..
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 பேரை பிரதமர் மோடி அறிமுக செய்து வைத்தார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 பேரை பிரதமர் மோடி கேரளாவில் இருக்கும் இஸ்ரோ மையத்தில் வெளியிட்டார். மேலும் படிக்க
மேலும் காண