top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details



விசா, மாஸ்டர்கார்டு – வணிக ரீதியிலான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை நிறுத்தி வைக்க ஆர்.பி.ஐ. உத்தரவு!

‘விசா’,’மாஸ்டர்கார்டு’ கிரெடிட், டெபிட் கார்டு கொண்டு மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரிசர்வ் வங்கி (Reserve Bank of India’s (RBI)) அறிவுறுத்தியுள்ளது.  ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகள் தொடர்பாக சமீக காலமாக நிறைய விதிமுறைகளை விதித்து வருகிறது. பே.டி.எம். நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை சரியாக பின்பற்றதாக காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மேலும் படிக்க..

தமிழக பள்ளிக்கல்வியில் புதிய நடைமுறை – விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம்..!

விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண்னை நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தாய்மொழியாக  கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே போதும். தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அந்த வகையில் விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..

தேர்தல் பத்திரங்கள் – ரூ.16 ஆயிரம் கோடிக்கு விற்பனை – பாஜகவிற்கு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?

தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி, பாஜக மட்டும் இதுவரை 6000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கறுப்பு பணம் ஒழியும் என மத்தியில் ஆளும் பாஜக தலைமயிலான அரசால், கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் நிதி பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க..

விண்ணில் பாய தயாரான GSLV-F14 விண்கலம் – இன்று தொடங்குகிறது 27.5 மணி நேர கவுண்டவுன்..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம், நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. வானிலை மற்றும் பேரிடர்  எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக  GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்குகிறது. பூமி அறிவியல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுள்ளது. INSAT-3DS புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.  மேலும் படிக்க..

மேலும் காண

Source link