top news India today abp nadu morning top India news February 1 2024 know full details



இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை

இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும், நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாரமன் பெறவுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும். மேலும் படிக்க..

2024-25 நிதியாண்டிற்கான மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தலைமயிலான அரசு இன்று தனது இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதையொட்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. மேலும் படிக்க..

பேடிஎம்-க்கு பேரிடி! மக்கள் பயன்படுத்த தடையா? ரிசர்வ் வங்கியின் அதிரடி கட்டுப்பாடுகள்

கடந்த சில ஆண்டுகளாகவே, டிஜிட்டல் இணைய சேவைகள் மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேடிஎம், ஜிபே உள்ளிட்ட சேவைகளைதான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். நட்சத்திர விடுதிகள் தொடங்கி சிறிய கடைகள் வரை, இவைதான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழலில், ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம்-இல் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும் பண பரிமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு, இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல்.. யாத்திரையில் விஷமிகள் செய்த காரியம்.. நடந்தது என்ன?

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகாரை தொடர்ந்து இன்று மேற்குவங்கம் சென்றடைந்தது. மேற்குவங்கம் மாநிலம் மால்டாவில் நுழைந்த வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் வாகனத்திற்குள் ராகுல் காந்தி பயணிக்கவில்லை. வெளியே இருந்துள்ளார். தாக்குதல் நடத்தப்பட்டதில் வாகனத்தின் பின்புற ஜன்னல் முற்றிலுமாக உடைந்துவிட்டது. ஆனால், ராகுல் காந்திக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. மேலும் படிக்க..
 

மேலும் காண

Source link