தூத்துக்குடி மாவட்டத்தில் சுங்கச் சாவடிகளில் 31ஆம் தேதி வரை, நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.
இதனால், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணங்களுக்கு விலக்கு அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சிமிபதி உத்தரவிட்டுள்ளார்.
நிவாரண பொருட்கள் கொண்டு வருவதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கும், நிவாரணப் பொருட்களுடன் செல்லும் வாகனங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூன்று சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்லலாம்.