tn govt mtc bus app new facility pay rs40 to go anywhere from Kilambakkam


Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
கிளாம்பாக்கத்தில் புதிய சேவை:
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , இன்று (29.02.2024)  தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து 1/2 pic.twitter.com/4xizJllLI7
— TN DIPR (@TNDIPRNEWS) February 29, 2024

திட்டத்தின் விவரங்கள்:
மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும்,  சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள் 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் 01.03.2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்விழாவின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆங்பி ஜான் வர்கீஸ் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. மோகன், மாபோக இணை மேலாண் இயக்குநர் குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய சலுகை பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் காண

Source link