Tiruvannamalai | திருவண்ணாமலை


திருவண்ணாமலையில்  நின்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பிரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் கரும்பு சங்கத்தின் மாநில துணை தலைவருமான பலராமன் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உயிரிழந்தார், அதனை தொடர்ந்து அவரின் உருவ படத்திற்கு இன்று சிபிஎம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினர். 
சிபிஎம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது;
மோடி அரசாங்கம் எப்படி ஒரு மோசமான அரசாங்கம் என்பதற்கு எடுத்துக்காட்டு தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், இந்தப் போராட்டத்தை மத்திய அரசு எப்படி அணுகுவது என்பதை பார்த்தாலே மத்தியில் ஆளும் பாஜக  அரசு எப்படிப்பட்ட மோசமான அரசு என்பதை புரிந்து கொள்ளலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் போராடி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு அதை இன்று வரை நிறைவேற்றவில்லை. தற்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது ராணுவத்தை வைத்து விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறார்.

இதுவரை எந்த ஒரு நாட்டிலும் கடைப்பிடிக்காத வகையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுதல், சாலையில் ஆணியை அமைத்தல், துப்பாக்கி சூடுகள் நடத்தி இதுவரை இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது போன்று ராணுவத்தை வைத்து போராட்டத்தை அடக்கிய நிலை எங்கும் பார்த்ததில்லை. இந்த நாட்டில் உள்ள விவசாயிகளையோ, உழைப்பாளிகளையோ, நடுத்தர மக்களை பற்றி கவலைப்படாமல் அவர்களுடைய வாழ்வை சீரழிக்கும் விதமாக ஆட்சி நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நாடு தழுவிய கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும். விவசாயிகள் இந்தப் போராட்டத்தினால் பாரதிய ஜனதா கட்சி வட மாநிலங்களில் படு தோல்வி அடையும்.  வாக்கு எந்திரத்தில் மோசடி நடப்பதாக அனைத்து அரசியல் கட்சிகள் நினைப்பதால்தான் வாக்கு எந்திரம் வேண்டாம். மீண்டும் ஓட்டு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

 
பாஜக அரசு அதை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் வாக்கு எந்திரத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறது. அதனால் தான் 420 இடங்களில் பாஜக வெற்றி பெறுவோம் என கூறி வருகின்றனர். எதிரணிகளும் அங்கங்கே வெற்றி பெறுகிறார்கள் என்பதை காட்டுவதற்கு தான் இடங்களிலும் வாக்கு எந்திரங்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு இந்த மோடி அரசு எதுவுமே செய்யவில்லை. அதை வைத்து வாக்கு கேட்க முடியாது என்பதால் தான் தற்போது ராமரை வைத்து மோடி வாக்கு சேகரிக்கிறார். தற்போதைய தேர்தலில் ராமரைக் காட்டி பாஜக அரசு வெற்றி பெற முடியாது. ராமரை நம்பி மக்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்த்த நிலையில் கடந்த காலங்களில் பல சட்டங்களுக்கு அதிமுக பாஜகவுடன் துணை நின்றது. தற்போது தங்கள் வெளியே வந்து விட்டதாக கூறினாலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக கட்சி கலைந்து போய்விடும். செய்யார் சிப்காட் தொழிற்சாலையில் விரிவாக்கம் திட்டத்திற்கு விவசாயிகளின் முழுமையான ஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர்களது நிலத்தை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு நிலங்களை எடுக்கக் கூடாது. ஒன்பது டோல்கேட் எடுக்க வேண்டுமென அரசிடம் பேசி உள்ளோம். வேளாண்துறைக்கு என தனியாக பட்ஜெட் வந்தவுடன் தான் வேளாண் துறையில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் அணுகுவற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண

Source link