Telangana Accident: தெலங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
தெலங்கானாவில் கார் விபத்து:
தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் இருந்து ஐதராபாத் நோக்கி வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காரின் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Live Accident- A speeding car toppled over a divider in Telangana’s Siddipet resulting in a deadly car crash.4 people reportedly have been severely injured in the accident. #Telangana #CarCrash #India #Breaking #CCTV #Accident pic.twitter.com/9273WKUYCT
— Chaudhary Parvez (@ChaudharyParvez) February 27, 2024
கட்டுப்பாட்டை இழந்த கார்:
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளில், “கருப்பு நிற கார் ஒன்று சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக தறிகெட்டு ஓடியுள்ளது. அப்போது சாலையின் நடுவே இருந்த டிவைடரின் மீது ஏறி மறுபுறம் இறங்கியுள்ளது. அதேநேரம், அவ்வழியாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று அதிவேகமாக வந்து, கருப்பு நிற காரின் மீது மோத அந்த கார் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளது. சில நொடிகள் காற்றிலேயே பறந்த அந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து உருண்டு புரண்டு ஒரு ஓரமாக நின்றுள்ளது. வெள்ளை நிற காரும் முன்புறத்தில் கடும் சேதமடைந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் சென்று நின்றது” ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் காண