10-வது ப்ரோ கபடி லீக் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்:
நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வி என மொத்தம் 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், 15 போட்டிகளில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் 2 போட்டிகளில் வெற்றியும், 13 போட்டிகளில் தோல்வி அடைந்து 16 புள்ளிகளுடன் 12-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தான் இந்த இரு அணிகளும் களம் காண்கிறது.
நேருக்கு நேர்
ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் 13 முறை தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில், தமிழ் தலைவாஸ் 7 முறை வெற்றி பெற்று உள்ளது, தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் 38-36 என்கிற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க: Yuvraj Singh: இந்தியாவுக்கு திறமை இருக்கு; ஆனாலும் தோல்வி ஏன்? – ஆலோசகராக விரும்பும் யுவராஜ் சிங்!
மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி… அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!