தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!
டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில் மகளுருக்கு அதாவது 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் அதிஷா அறிவிக்கையில், “புதிய புரட்சிகரமான திட்டம் கொண்டு வரப்படுகிறது. மேலும் படிக்க
இனி முதலமைச்சரே மக்களுக்கு போன் செய்வார்! தமிழ்நாட்டில் அறிமுகமாகும் ”நீங்கள் நலமா திட்டம்”
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைத்து அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமிழ்நாடு மக்களுக்கு போனில் அழைத்து மக்களின் குறைகள் குறித்து கேட்டறியவுள்ளனர். இந்த திட்டத்திற்கு நீங்கள் நலமா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 6ஆம் தேதி முதல் அதாவது மார்ச் மாதம் 6ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் படிக்க
TN CM MK Stalin: ரூ.463 கோடி; 71 கட்டடங்கள் – திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார். மேலும் படிக்க
ADMK Protest: அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம் – கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் ஆர்பாட்டம்
போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதை கண்டித்து தமிழ்நாட்டில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மிழ் நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுளிவு ஏற்பட்டுள்ளது” என்றும் எடப்பாடி பழனிசாமியின் கூறியிருந்தார். மேலும் படிக்க
TN Weather Update: அதிகரிக்கும் வெப்பநிலையால் தவிக்கும் மக்கள்.. இனி வரும் நாட்கள் இப்படி தான் இருக்கும்..
தமிழ்நாட்டில் வரும் மார்ச் 10 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 04.03.2024 மற்றும் 05.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
மேலும் காண