Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here



“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி” நீதிபதி தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின இளம்பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் படிக்க

CM Stalin: சர்ச்சைக்குள்ளான கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்: கேள்வி எழுப்பிய இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!

பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். மேலும் படிக்க

Senthil Balaji: செந்தில்பாலாஜிக்காக கோரிக்கை வைத்த முதல்வர் – ஏற்றுக்கொண்ட ஆளுநர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

JEE Mains Result: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு; முழு மதிப்பெண்கள் பெற்ற 23 பேர்- காண்பது எப்படி?

2024ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. மதிப்பெண்களை எப்படித் தெரிந்துகொள்வது என்று பார்க்கலாம்.  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. மேலும் படிக்க

Woman Judge: ரத்தம் சொட்ட சொட்ட எழுதிய தேர்வு… 22 வயதில் நீதிபதி – பழங்குடியினருக்கு பெருமை சேர்த்த இளம்பெண்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த  புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு  திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. மேலும் படிக்க
 
 
 
 
 
 

மேலும் காண

Source link