Exclusive: செந்தில் பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? : அமைச்சர் முத்துசாமி விளக்கம்
கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகின்ற 12-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் படிக்க…
மேட்டூர் அணையின் நீர்வரத்து 15 கன அடியில் இருந்து 62 கன அடியாக அதிகரிப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 15 கன அடியாக இருந்தது. மேலும் படிக்க…
ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்களை டெல்லிக்கு அனுப்புங்கள், படிக்கத் தெரியாதவர்களை.. – அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை பேச்சு
நன்றாக படித்து ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்களை டெல்லிக்கு அனுப்புங்கள் படிக்கத் தெரியாதவர்களை எங்களோடு சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். அங்கே சபாநாயகர் அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார் எனும் நகைச்சுவையோடு அமைச்சர் துரை முருகன் தருமபுரி பொதுக்கூட்டத்தில் பேசினார்.மேலும் படிக்க…
ஜனநாயக நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் : பாரிவேந்தர் பிரச்சாரம்
ஜனநாயக நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர், நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நல்ல திட்டங்கள் வரும் என தெரிவித்தார். மேலும் படிக்க…
CM MK Stalin: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்; தயாரான பிரம்மாண்ட மேடை! குவியும் தொண்டர்கள்
விழுப்புரம், கடலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
பிரதமர் மோடி மஸ்தான் வித்தை காட்டுபவர் – மாணிக்கம் தாகூர் விமர்சனம்
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரின் பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 500 ரூபாயாக இருந்த எரிவாயு சிலிண்டர் விலையை 1200 ரூபாய்க்கு உயர்த்தியவர் நரேந்திர மோடி. இந்த தேர்தலை முன்னிட்டு 500 ரூபாய் குறைக்கப்படும் என டகால்டி வேலை செய்து மோடி மஸ்தான் வித்தை காட்டுபவர் பிரதமர் நரேந்திர மோடி.மேலும் படிக்க…
மேலும் காண