Tamil Nadu latest headlines news April 12th 2024 flash news details know here


Lok Sabha Election 2024: இன்று நெல்லையில் ராகுல்காந்தி, மதுரையில் அமித்ஷா – தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக  தேசிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க
Schools Holiday: தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை! அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
மயிலாடுதுறையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
Lok Sabha Elections 2024: எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் தெருக்கோடியில் நின்று மக்களுக்காக போராடுவேன் – சீமான்
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய சீமான், நாட்டினை நரேந்திர மோடி பத்தாண்டுகளும் மன்மோகன்சிங் பத்தாண்டுகளும் ஆட்சி செய்து எந்த மாற்றமும் நிகழவில்லை, வளரும் நாடுகளின் பட்டிலியலையே இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக பத்தாண்டுகளில் பயனுள்ள திட்டங்கள் இதுவரை கொண்டுவரவில்லை. மேலும் படிக்க…
 
Madurai Chithirai Thiruvizha: கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா..! ஏப்.21 மீனாட்சி திருக்கல்யாணம்
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களில் இருந்தும் குவிவார்கள். இதனால் தூங்காநகரம் என்பன போன்ற பல பட்டப்பெயர்களை கொண்ட மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. மேலும் படிக்க
 
TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு சில்லென மாறும் தமிழ்நாடு.. எந்தெந்த மாவட்டங்களில்? வெதர்மேன் சொல்லும் தகவல்..
 
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link