Tag: வடக்குப்பட்டி ராமசாமி

• Vadakkupatti Ramasamy Success Meet actor Santhanam shares reason of title name | Vadakkupatti Ramasamy: “நன் படத்துல வர்ற பேய் மாதிரி இருக்கும்”

Vadakkupatti Ramasamy Success Meet actor Santhanam shares reason of title name | Vadakkupatti Ramasamy: “நன் படத்துல வர்ற பேய் மாதிரி இருக்கும்”

Vadakkupatti Ramasamy: தனது படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க கவுண்டமணி தான் காரணம் என்று படத்தின் ஹீரோவான நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
வடக்குப்பட்டி ராமசாமி:
சந்தானம் நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் வரவேற்பை பெற்று வருகிறது. டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, நிழல்கள் ரவி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டைட்டிலுக்கு எதிர்மறை கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் சந்தானம் பதிலளித்தார். அதில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஹீரோயினுடன் காதல் காட்சிகள் பெரிதாக இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம், “ஹீரோயின் உடன் எந்த காட்சிகளும் வைக்கவில்லை. அதை தான் நானும் டைரக்டர்கிட்ட கேட்டேன்” என்றார். மேலும் நிகழ்ச்சி மேடையில் படத்தின் ஹீரோயின் கருப்பு நிறை ஆடை அணிந்து வந்திருந்தார். அதை பார்த்த சந்தானம், இந்த கருப்பு ஆடையை வேறு யாராவது போட்டு இருந்தால் நன் படத்தின் பேய் மாதிரியே இருக்கும். ஆனால், இவர் போட்டு இருப்பதால் அழகா இருக்கு என்றார்.
கடவுளை வைத்து காசு பார்ப்பது தவறு:

தொடர்ந்து பேசிய அவர், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வைத்து காசு பார்ப்பது தவறு. கடவுள் பெயரை வைத்து அரசியல் மற்றும் பிரச்சனை பண்ணுவது தவறு. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. நான் ஆன்மீகவாதி. வடக்குப்பட்டி ராமசாமி படத்தை நாத்திகர் மற்றும் ஆத்திகர் என இருவரும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு படத்தின் இயக்குநர் கார்த்திக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

மேலும், படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி பெயர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க காரணம் கவுண்டமணி தான். படத்தின் இயக்குநர் கவுண்டமணி ரசிகர். நானும் கவுண்டமணி ரசிகர். டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்டவை கவுண்டமணியின் காமெடிகள். அதன் அடிப்படையில் தான் படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதற்கும் ஈவேரா வுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

மேலும் காண

Source link

• santhanam Vadakkupatti Ramasamy Box Office collection report

santhanam Vadakkupatti Ramasamy Box Office collection report

சந்தானம் நடித்து நேற்று வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்க்கலாம்.
வடக்குப்பட்டி ராமசாமி
சந்தானம்  நடித்து கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், லொள்ளு சபா மாறன், ஜான் விஜய், சேசு, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்தப் படத்தின் டீசர் பெரிய சர்ச்சையை கிளப்பியது.  இந்த டீசரில் தந்தை பெரியாரை விமர்சிக்கும் வகையில் காட்சி இடம்பெற்றிருந்ததாக கூறி படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தன. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் விளக்கம் அளித்தார். யாருடைய மனதையும் புன்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் எப்போது மக்களை சிரிக்க வைத்த புதிதாக ஏதாவது முயற்சி செய்வதாக சந்தானம் தெரிவித்தார். மேலும் இப்படியான சர்ச்சைகள் படத்திற்கு ப்ரோமோஷனாக அமையும் என்று முன்னதாக எதுவும் பேசாமல் விட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். சந்தானத்தின் இந்த ப்ரோமோஷன் திட்டம் எப்படி வேலை செய்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கதை
ஒரு ஊரில் இருக்கும் சிறுவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை.  தற்செயலாக நடந்த சம்பவத்தால் அவன் செய்த பானையை அந்த ஊரில் உள்ளவர்கள் கடவுளாக வழிபட ஆரம்பித்துவிட்டனர். இதனை தனக்கு வருமானம் பார்க்கும் ஒரு வியாபாரமாக மாற்றி வாழ்ந்து வருபவர் சந்தானம். இவருடன் இணைந்து ஊரை ஏமாற்றிவருபவர்களாக மாறனும், லொல்லு சபா சேஷூவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு அந்த ஊருக்கு  வட்டாச்சியராக வரும் தமிழ் தொந்தரவு கொடுக்க, கோயில் பூட்டப்படுகின்றது.  இதனால் ஏற்பட்டது என்னென்ன? இறுதியில் என்ன ஆச்சு? என்பது படத்தின் மிதிக் கதையாக இருக்கிறது. மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளம் நடித்துள்ள இந்தப் படம் சந்தானத்திற்கு இன்னொரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

Team #VadakkupattiRamasamy overwhelmed with the response from the audience in @kamala_cinemas.#VadakkupattiRamasamySuperhit @iamsanthanam @karthikyogitw @akash_megha @vishwaprasadtg @peoplemediafcy @vivekkuchibotla pic.twitter.com/r5zOuWMNjP
— Only Kollywood (@OnlyKollywood) February 3, 2024

வடக்குபட்டி ராமசாமி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சாக்னிக் தளத்தில் வெளியாகியுள்ள தகவலிபடி  முதல்  நாளில் 70 கோடிகளை திரையரங்கங்களில் வசூல் செய்துள்ளது வடக்குப்பட்டி ராமசாமி. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க ; Vadakkupatti Ramasamy Review: நகைச்சுவையில் வென்றாரா வடக்குப்பட்டி ராமசாமி? முழு விமர்சனம் இதோ!
LIC Movie: LIC பட ஷூட்டிங்கில் வேலையை காட்டிய நிஃபியா பர்னிச்சர் சிறுவன்.. வைரலாகும் வீடியோ!

மேலும் காண

Source link

• “ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

“ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

TN Update
26 Jan, 07:02 PM (IST)

”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு

Source link

• Santhanam on Periyar Issue in Vadakkupatti Ramasamy audio launch : ’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

Santhanam on Periyar Issue in Vadakkupatti Ramasamy audio launch : ’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

’’யாரையும் நான் தாக்கி பேசலஅது கடவுளுக்கு தெரியும்’’சந்தானம் விளக்கம்

Source link

• Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

Santhanam: பிக்பாஸ் போயும் திருந்தாத கூல் சுரேஷ்.. சந்தானத்தை ஏமாற்றிய கதை தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகும் கூல் சுரேஷ் திருந்தவே இல்லை என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டிக்கிலோனா படத்துக்குப் பின் அவருடன் நடிகர் சந்தானம் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என பலரும் நடித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியிட்டு விழா  இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.

கூல் சுரேஷ் பேச்சு

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “உங்களுக்கு தான் சந்தானம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. ஆனால் எனக்கு அவர் குலதெய்வம் சாமி. இந்த படம் நடிக்கிறது முன்னாடி நானும் சந்தானமும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் அவரிடம் அடுத்தப்படம் பற்றி கேட்டேன். உடனே சந்தானம் இயக்குநர் கார்த்திக் யோகியிடம் போன் பண்ணி கொடுத்து பேச சொன்னார். மறுநாள் போனதும் படத்தில் நடிக்கிறது தொடர்பாக சொன்னார். ஒருவாரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன்.

அப்போது கார்த்திக் யோகி என்னிடம், ‘கூல் அண்ணா நீங்க இந்த படத்துக்கு அப்புறம் தியேட்டர் வாசலில் இருந்து கத்த வேண்டாம். உங்களை பார்த்து தியேட்டர் உள்ளே கத்துவார்கள். ரசிகர்களை உங்களை வரவேற்கும் அளவுக்கும் இந்த கேரக்டர் இருக்கும்’ என சொன்னார். அதனால் இயக்குநருக்கும், சந்தானத்துக்கும் என் நன்றிகள் (தரையில் விழுந்து கூல் சுரேஷ் கும்பிட்டார்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது என்னை அறியாமல் குடும்பத்தை நினைத்து அழுதேன். வெளியே நிறைய பேரு என்னை அழாதீர்கள் என சொன்னார்கள். பிக்பாஸூக்கு அப்புறம் கூல் சுரேஷ் வேற மாதிரி மாறிட்டேன். இப்ப என்னை அறியாமலேயே ரசிகர்களை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். இருந்தாலும் என் நண்பனுக்காக “வெந்து தணிந்தது காடு.. வடக்குப்பட்டி ராமசாமிக்கு வணக்கத்தைப் போடு” என சொல்லிக் கொள்கிறேன்.

திருந்தவே இல்லை – சந்தானம் கலகல பேச்சு

இதனைக் குறிப்பிட்டு பேசிய சந்தானம், ‘பிக்பாஸ் நிகழ்ச்சி போய்ட்டு வந்த அப்புறம் திருந்திட்டன்னு சொன்னீயே?. இல்ல கூல் சுரேஷ் நடவடிக்கையை வெளியே விட்டு பார்த்தா தான் தெரியும். நேற்று கூட டப்பிங் பணி நடக்கும்போது, ‘இல்ல சந்தானம் பிக்பாஸ் நிகழ்ச்சி போய்ட்டு வந்த அப்புறம் நான் திருந்திட்டேன். கத்துறது இல்ல’ன்னு சொன்னான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் எனக்கு போன் பண்ணான். இந்த மாதிரி சால்வை, மாலை போடணும் என சொன்னான். சரி வான்னு நானும் சொல்லிட்டேன். அங்க வந்த என் கையில் இரண்டையும் கொடுத்து அவனுக்கு போட சொல்லி போட்டோ எடுத்துட்டு கூல் சுரேஷ் போய்ட்டான். அங்கிருந்து டி.ஆர்.ராஜேந்தர் வீட்டுக்கு போய் பார்த்து அவரையும் ஏமாற்றிட்டான். வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்குப் பின் கூல் சுரேஷின் பெயர் மாறும்” என தெரிவித்தார்.

Source link

• Vadakkupatti Ramasamy Official Trailer Santhanam Megha Akash Karthik Yogi

Vadakkupatti Ramasamy Official Trailer Santhanam Megha Akash Karthik Yogi

Vadakkupatti Ramasamy: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கலக்கப்போவது என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நடிகர் சந்தானம் சினிமாவில் காமெடி நடிகராக உயர்ந்தார். சந்தானம் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில், ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த பேய் படங்களும், காமெடி படங்களும் வெற்றி பெற்றிருந்தாலும் சில படங்கள் சொதப்பலால் வசூலில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் அறிவிப்பு வெளியாகி கவனத்தை ஈர்த்தது. சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தை ஃபீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, விட்னஸ் பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார்.

காமெடி ஜானரில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமியின் டிரெய்லர் உருவாகி வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லரின் தொடக்கத்திலேயே “ நேர்ல பாத்தா” என்ற டயலாக் மாறி மாறி பேசி படம் முழுக்க தரமான காமெடி சம்பவம் இருக்கு என்பதை காட்டுகிறது. அடுத்ததாக, ”ஏண்டா டேய் … சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ? “ என கேட்கும் வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. கடைசியாக,  ‘இவன் சரியான பைத்தியம் இல்ல; சரியாகாத பைத்தியம்’ போன்ற வார்த்தை விளையாட்டின் வசனங்கள் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Source link