Tag: ராமர் கோயில் கட்டுமானம்

  • Direct Flight from Chennai to Ayodhya – How much does it cost? Do you know what time it is? | Ayodhya Flight Service: சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை

    Direct Flight from Chennai to Ayodhya – How much does it cost? Do you know what time it is? | Ayodhya Flight Service: சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை


    Ayodhya Flight Service: ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகருக்கு, தேவைக்கு ஏற்ப விமான சேவை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அயோத்தி ராமர் கோயில்:
    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கடந்த 23ம் தேதி முதல் பொதுமக்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய முனைப்பு காட்டுகின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் ராமர் கோயிலுக்கு செல்ல திட்டமிடுகின்றனர்.
    சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை:
    அயோத்தி நகருக்கு செல்ல விரும்பும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, தற்போது நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் நாள் ஒன்றிற்கு சென்னையில் இருந்து அயோத்திக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 7:20-க்கு சென்னை வந்து சேரும். இந்த விமான சேவைக்கு ரூ.6,499 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்தின் 7 நாட்களும் இந்த சேவை தொடரும். இதனிடையே, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெப்பூர், பாட்னா, தர்பங்கா,  உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. இந்த இரு வழி விமான சேவைகள மத்திய விமானப் போக்குவரத்து  அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, நாளை (பிப்ரவரி 1) தொடங்கி வைக்கிறார்.
    வர்த்தக நகரமாகும் அயோத்யா:
    ராமர் கோயிலை காண ஏராளமான பக்தர்களுடன், அயோத்தி நகருக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதனால், அப்பகுதி சுற்றுலா பகுதியாக மாற்றம் காண்பதோடு, வர்த்தக நகரமாகவும் உருவெடுக்கும் என நம்பப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே, அயோத்யா நகரில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. ‘மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி வைத்தார். டெல்லி மற்றும் அகமதாபாதிலிருந்து புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களுக்கும்,  ஜெய்பூர், பாட்னா, தர்பங்கா மற்ரும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து வாரத்துக்கு 4 நாட்களுக்கும் அயோத்திக்கு இருவழி விமான சேவை இயக்கப்பட உள்ளது.

    மேலும் காண

    Source link

  • Ayodhya Ram Mandir Construction Tells A Story Of Ek Bharat Shreshtha Bharat, One Brick At A Time From Every State | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்

    Ayodhya Ram Mandir Construction Tells A Story Of Ek Bharat Shreshtha Bharat, One Brick At A Time From Every State | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது.
    அயோத்தி ராமர் கோயில்:
    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையயொட்டி இந்த கோயில் கட்டுமானம் எப்படி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது என்பது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “காஷ்மீரின் பனி மூடிய சிகரங்கள் முதல் கன்னியாகுமரியில் சூரிய ஒளியில் நனைந்த கடற்கரைகள் வரை, ராமரின் பெயர் இந்தியா முழுவதும் பக்தியுடன் எதிரொலிக்கிறது. இப்போது, இந்தப் பக்தி அயோத்தியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயிலின் வடிவத்தில் ஒரு உறுதியான வடிவத்தை எடுத்துள்ளது. கம்பீரமான இந்தக் கோயில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக  உறுதியுடன் நிற்கிறது. இது பிரமாண்டத்துடன் மட்டுமல்லாமல் மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து உருவாக்கப்பட்டதாகவும் உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முன்முயற்சி இந்த கருத்தை ஆழமாக எதிரொலிக்கிறது. மாநில எல்லைகளைத் தாண்டி, ஒரு கோயிலுக்கான கட்டுமானப் பயணத்தில் தேசத்தை இது ஒன்றிணைக்கிறது. 
    பல்வேறு மாநிலங்களின் அடையாளம்:
    ராஜஸ்தானின் மக்ரானா பளிங்குக் கல்லால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கோயிலின் மையப்பகுதி கம்பீரமாக நிற்கிறது. கர்நாடகாவின் சார்மௌதி மணற்கல், ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரிலிருந்து இளஞ்சிவப்பு மணற்கல் நுழைவு வாயிலின் கம்பீரமான உருவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்பீரமான 2100 கிலோ அஷ்டதத்து மணி குஜராத் படைப்பாகும்.  அகில இந்திய தர்பார் சமாஜத்தால் வடிவமைக்கப்பட்ட 700 கிலோ ரதத்தையும் குஜராத் வழங்குகிறது.
    ராமர் சிலைக்கு பயன்படுத்தப்படும் கருப்பு கல் கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்திலிருந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் கலை வண்ணத்துடன் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மரக் கதவுகள் தெய்வீக சாம்ராஜ்யத்தின் நுழைவாயில்களாகத் நிற்கின்றன.
    கோயிலில் பயன்படுத்தப்படும் வெண்கல பயன்பாடுகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவை.  மெருகூட்டப்பட்ட தேக்கு மரங்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. ராமர் கோயிலின் கதை வெறுமனே பொருட்கள் மற்றும் புவியியல் தோற்றம் பற்றியது மட்டுமல்ல. இந்த புனிதமான முயற்சியில் இதயங்கள், ஆன்மாக்கள் இணைந்துள்ளன. திறன்களை வெளிப்படுத்தியுள்ள  ஆயிரக்கணக்கான திறமையான கைவினைஞர்களின் பணிகளுக்கும் இது சான்றாகும். ராமர் கோவில் என்பது அயோத்தியில் உள்ள அடையாளச் சின்னம் மட்டுமல்ல. நம்பிக்கையை ஒன்றிணைக்கும் சக்திக்கு இது ஒரு சான்று. ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு செதுக்கலும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு துணியும் புவியியல் எல்லைகளைக் கடந்து, ஒரு கூட்டு ஆன்மீகப் பயணத்தில் இதயங்களை ஒன்றிணைத்து, அவை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கதையைச் சொல்கின்றன” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    தமிழகர்களின் பங்கு:
    கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் – சீதை கருவறைகள், ராமரின் தம்பி லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகள் தயாராகி உள்ளன. இவற்றை மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையிலான,  50க்கும் மேற்பட்டோர் கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். இதனிடையே, அயோத்தி ராமர் கோயிலில் அபிஷேகம் செய்ய,  ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தீர்த்த கலசங்களை பிரதமர் மோடி கொண்டு சென்றதும் குறிப்பிடத்தகக்து.  

    Source link