Tag: ராமநாதபுரம்

• சொந்தமாக கட்சி இல்லை, சின்னம் இல்லை; ஆனாலும் ஓபிஎஸ்க்கு கிட்டுமா வெற்றி? களநிலவரம் என்ன?!

சொந்தமாக கட்சி இல்லை, சின்னம் இல்லை; ஆனாலும் ஓபிஎஸ்க்கு கிட்டுமா வெற்றி? களநிலவரம் என்ன?!

மக்களவை தேர்தலில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:

இந்திய நாட்டில் மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம் தொகுதி பிரபலமான தொகுதியாக மாறியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.

கள நிலவரம்:

ராமநாதபுரம் தொகுதியை எடுத்து கொண்டால் மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில், இந்திய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி போட்டியிடுகிறார். அஇஅதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இம்மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

இருப்பினும் தற்போது இருக்கக்கூடிய கள நிலவரங்களை பார்க்கும்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. முக்குலத்தோர் சமூகம் அதிகமாக உள்ள வாக்குகள்  அஇஅதிமுக-வுக்கு அதிகமாக ஆதரவு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மறைவு மற்றும் அஇஅதிமுக பிளவுக்கு பின்பு ஓபிஎஸ்-தினகரன் ஆகியோருக்கு ஆதரவாகவும் இபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ் தோற்கடிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் வேலை பார்க்கப்படுவதாகவும், அதன் வெளிப்பாடே ஓபிஎஸ் என்கிற பெயரில் 5 பேரை மனுதாக்கல் செய்ய வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். – காரணம் என்ன?

ராமநாதபுரம் தேர்வு:

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து இருப்பதால் முக்குலத்தோரின் வாக்குகள் ஓபிஎஸ் பக்கம்தான் என கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே, அதிமுக வேட்பாளரையும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான ஜெயகோபாலை நிறுத்தி, வாக்குகளை பிரித்து ஓபிஎஸ்-ஐ தோற்கடிக்க இபிஎஸ் திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இபிஎஸ்-ஐ மனதில் வைத்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகிறது.

மேலும், ராமநாதபுரத்தில் பாஜகவுக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. இதுவும் ஓபிஎஸ்-க்கு மேலும் வலு சேர்க்கும். இதன் காரணமாக ராமநாதபுரத்தை ஓபிஎஸ் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும், திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரும், தற்போதைய எம்.பி-யுமான நவாஸ்கனிக்கு பெரிதாக எதிர்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தோர் சிலருக்கு பாஜக மீது எதிர்ப்பு உள்ளதாகவும், அது நவாஸ் கனிக்குதான் வாக்குகளாக மாறும் எனவும் கூறப்படுகிறது. அதனால் ஓபிஎஸ் மற்றும் நவாஸ் கனியிடையே கடுமையான போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் வெற்றி:

கடந்த மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 38 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஒரு இடங்களில் அதிமுக வென்றது, அது தேனி தொகுதிதான். அங்கு வெற்றி வேட்பாளராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்.  ஆகையால், ஓபிஎஸ் அரசியல் அனுபவத்தை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. அதுவும், இந்த முறை வாழ்வா, சாவா என்பது போன்ற சூழ்நிலையில் ஓபிஎஸ் வெற்றி பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.

ராமநாதபுரம் கள நிலவரமானது மாறி கொண்டே இருக்கிறது. சில தருணங்களில் நவாஸ் கனிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில தருணங்களில் ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை பாஜக எதிர்ப்பு ஓபிஎஸ் பக்கம் திரும்பினால் நவாஸ் கனிக்கு சாதகம்தான் என்பதால் தேர்தல் முடிவின்போதே உண்மை நிலவரம் தெரிய வரும்.

Also Read: Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு – ஜெயலலிதாவின் அரசியல் களம்

இந்த செய்தியை விரிவாகவும் வீடியோவாகவும் பார்க்க விரும்பினால், இந்த யூடியூப் பக்கத்தை கிளிக் செய்யவும்;

Source link

• Lok Sabha Election 2024 I will make Ramanathapuram Maldives Ops assured – TNN

Lok Sabha Election 2024 I will make Ramanathapuram Maldives Ops assured – TNN

என்னை தேர்ந்தெடுத்தால் ராமநாதபுரம் தொகுதியை மாலத்தீவு போல கடல் சார் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். பிற மாவட்ட மக்கள் இங்கு வேலை தேடி வரும் நிலையை உருவாக்குவேன் என ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் ஆலோசனை கோட்டத்தில் ஓபிஎஸ் தேர்தல் வாக்குறுதியளித்தார்.

ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையில் ராமநாதபுரத்தில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓபிஎஸ் பேசுகையில், “ராமநாதபுரம் தொகுதி 120 கிலோமீட்டர் கடலோர பகுதிகளை கொண்ட தொகுதி. இந்த தொகுதியை மாலத்தீவை போல சுற்றுலா தலமாக மாற்றி அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய அளவுக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பேன், கடல் சார்ந்த சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுப்பேன். ராமநாதபுரம் மாவட்டத்தை பொருளாதாரத்தில் சிறந்த மாவட்டமாக மாற்ற, மத்திய அரசின் உதவிகளோடு நடவடிக்கை எடுக்கப்படும். பிழைப்பு தேடி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்வதை தடுத்து நிறுத்தி பிற மாவட்ட மக்கள் ராமநாதபுரத்திற்கு வேலை தேடி வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவேன்.

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே தங்கி இருந்து உங்களுக்காக பாடுபடுவேன். 2001 முதல் 2024 வரை தேனி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறேன். மருத்துவ கல்லூரியிலிருந்து கலை கல்லூரி வரை அனைத்து வகையான கல்லூரிகளை ஏற்படுத்தி, தேனி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

அதேபோல, ராமநாதபுரம் தொகுதியை பொருளாதார வளம் மிக்க தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்று வாக்குறுதி அளித்து பேசினார்.

மேலும் காண

Source link

• பெரும் பரபரப்பு சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி-: எந்த தொகுதி?

பெரும் பரபரப்பு சுயேட்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி-: எந்த தொகுதி?

ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ஒரு தொகுதியில் ஓபிஎஸ் போட்டி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாடு பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ஓபிஎஸ் அணி, எத்தனை தொகுதியில் போட்டியிட உள்ளது, எந்த தொகுதியில் போட்டியிட உள்ளது என கேள்விக்குறியாக இருந்தது. மேலும் பாஜக மற்றும் ஓபிஎஸ் அணியினரிடையே கூட்டணி உடன்பாடு குறித்து பெரும் இழுபறி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மேலும் அந்த ஒரு தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில், தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில், நானே களத்தில் இறங்க முடிவு எடுத்துள்ளேன் என்று யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
பலத்தை நீருபிப்பாரா?:
அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை பெறுவதே இலக்கு என செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிக்கப்பட்டுவிட்டார். அதிமுக கட்சி- சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டது.
அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள ஓபிஎஸ், கட்சி- சின்னம் கோரி வழக்குகளை தொடர்ந்து நடத்தி வந்தாலும், அவருக்கு பின்னடைவையே சந்தித்து வருகிறார்.
மேலும், ஓபிஎஸ் பாஜக கூட்டணிக்குச் சென்றார், ஆனால் பாஜக கூட்டங்களில் ஓபிஎஸ் அழைக்கப்படாமை, கூட்டணி அறிவிப்பு மேடைகளில் கூட ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என பேசுபொருளானது.

Source link

• Lok sabha election 2024 Ramanathapuram news devendra kula vellalar Boycott Election poster viral on social media – TNN | ‘பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை’ ‘இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு’

Lok sabha election 2024 Ramanathapuram news devendra kula vellalar Boycott Election poster viral on social media – TNN | ‘பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை’ ‘இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு’

தேவேந்திர குல வேளாளர்களைப்  பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்யாமல், வெறும் பெயர் மாற்றக் கோரிக்கையை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. பட்டியல் பிரிவில் உள்ள 6 சாதிகளை அதிலிருந்து விலக்கிட வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றோம். இதுதான் முக்கியக் கோரிக்கை. இல்லாவிட்டால் எவ்விதப் பலனும் கிடைக்காது. சாதி ஒழிப்பின் முதல் படியாக பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றத்தைப் பார்க்கிறோம் என தொடர்ந்து அச் சமுதாய மக்கள் போராடி வருகின்றனர்.
மேலும், எந்த சமூகத்திற்குத் தங்களைச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள தெரியவில்லையோ அந்தச் சமூகம் வெற்றி பெற முடியாது. தேவேந்திரகுல வேளாளர்களுக்கான அரசியல் அதிகாரம் தமிழக அரசியலில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவையில், ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே, ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்களது புகாராக இருந்து வருகிறது.
அரசின் நலத்திட்டங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் நிலையில் தாழ்ந்த சாதி என கூறி ஒரு பிரிவினரை பிரிப்பது ஏன்? பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற்றப்படுவதால் யாருடைய இட ஒதுக்கீட்டிற்கும் இடையூறு இருக்காது என்றும் அந்த சமூகத்துக்கு 6 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது தான் தங்களின் கோரிக்கை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் காலத்தில் போராட்டத்தை முன்னெடுத்தால், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படலாம் என்ற அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ‘பட்டியல் வெளியேற்றம் இல்லை என்றால் வரும் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றும் ‘பட்டியல் வெளியேற்றம்’ ‘எம் இனத்தின் விடுதலை’ என வாசகங்கள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 10% இட ஒதுக்கீட்டுடன் எங்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்பவர்களுக்கே எங்களது ஆதரவும் எனவும், எந்த அரசியல் கட்சியையும் தாங்கள் ஆதரிக்கப் போவது இல்லை எனவும், எஸ். சி பட்டியலில் இருந்து வெளியேறும் வரை வருகின்ற தேர்தல் அனைத்தையும்  புறக்கணிக்க போவதாகவும் பரபரப்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
பெயர் மாற்றம் வேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் இச்சமுதாய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், பட்டியல் வெளியேற்றம் என்பதை நிராகரித்து, பெயர் மாற்றம் மட்டுமே செய்து விட்டு கோரிக்கையை நிறைவேற்றி விட்டதாக தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்கிறார்கள். ஆனாலும், பட்டியல் வெளியேற்றம் என்ற அவர்களது கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருப்பதாக இதன் மூலம் தொடர்ந்து வெளி உலகத்துக்கு தெரிவிக்கின்றனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா அல்லது தேர்தல் புறக்கணிக்கப்படுமா என்பது போக போகத்தான் தெரியும்.

மேலும் காண

Source link

• Ramanathapuram news Banyans printed with pictures of Stalin, Udayanidhi seized rs 11 lakhs caught in one day – TNN | ஸ்டாலின், உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் பறிமுதல்

Ramanathapuram news Banyans printed with pictures of Stalin, Udayanidhi seized rs 11 lakhs caught in one day – TNN | ஸ்டாலின், உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் பறிமுதல்

மக்களவை தேர்தலையொட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களவை தொகுதிக்கான ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

மேலும், ஒவ்வொரு வாகனத்திலும் கையடக்க ‘டேப்ளட்’ நவீன போன் மூலமாக வீடியோக்கள் முழுவதுமாக பதிந்து சேமிக்கப்படுகிறது. ரூ.49 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் அரசியல் கட்சி சார்ந்த கொடிகள் கட்டப்பட்டிருந்தால் அகற்றுதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்துகின்றனர்.

அதிகாரிகள் தரப்பில், “வாகனத் தணிக்கையின் போது, வீடியோ பதிவுக்குழு இருந்தாலும், வாகனங்களில் சிசிடிவிக்கள் பொருத்தி இருப்பதன் மூலம் எல்லா கோணத்திலும் கண்காணிக்க முடியும். இம்முறை இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் மட்டும், பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.10,88,730 பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கருவூலங்களில் செலுத்தப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை-பரமக்குடியில் கருமொழி செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அலுவலர் வீரராஜா தலைமையில் நடந்து வந்த இந்த சோதனையில் தேவகோட்டையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரினை சோதனை செய்துள்ளனர். அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட 47 பனியன்களும், தகுந்த ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் ரொக்கமும் இருந்துள்ளது. அந்த புகைப்படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களில் ராமநாதபுரம் மாவட்டம், திமுக இளைஞர் அணி என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது.

எனவே, இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப இளைஞரணி செயலாளர் கண்ணன், ராமநாதபுரம் பவுசுல்லா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படை அலுவலர் கோட்டைராஜா தலைமையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.97 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாம்பனை சேர்ந்த கோமதி என்பவரிடம் அதிகாரிகள் தங்களது விசாரணையினை நடத்தி வருகிறார்கள்.

இதே போல், பரமக்குடி அருகில் தெளிச்சாத்தநல்லூர் என்னும் பகுதியில் தாசில்தார் வரதன் மற்றும் பறக்கும் படை அலுவலர் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் விளத்தூர் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் இருந்து தகுந்த ஆவணமின்றி ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணத்தினை கொண்டு சென்ற விளத்தூர் பார்த்திபனை பரமக்குடி தலைமையிடத்து தாசில்தாரான சீதாலட்சுமியிடம் அலுவலர்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்துள்ள பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பணம் திரும்ப கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

• Ramanathapuram Street Rowdies Issue Bakery worker kicked for defaulting on loan in Sayalkudi – TNN | Crime: கடன் கொடுக்காத பேக்கரி ஊழியருக்கு விழுந்த அடி உதை

Ramanathapuram Street Rowdies Issue Bakery worker kicked for defaulting on loan in Sayalkudi – TNN | Crime: கடன் கொடுக்காத பேக்கரி ஊழியருக்கு விழுந்த அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம் ‘சாயல்குடி பேரூராட்சி’ கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பிசியாகவே இருக்கும். இங்குள்ள கன்னியாகுமரி சாலையில் இயங்கி வரும் தனியார் (அய்யங்கார்) பேக்கரியில் நேற்று இரவு 9 மணியளவில் மிக்சர், கேக் உள்ளிட்ட தின் பண்டங்கள் வாங்கிய ஒரு நபர் இதை கடனாக தருமாறும் பிறகு வந்து தருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

அதற்கு பேக்கரி ஊழியர்கள் கடன் கொடுப்பது இல்லை என கூறியதை அடுத்து, ‘உங்க ஓனரிடம் சொல்லு நான் யார் தெரியுமா’..? எனக்கேட்டபடி பேக்கரி ஊழியரை ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டு ஊழியரின் செல்போனையும் கீழே தட்டிவிட்டுக்கிறார். தடுக்க வந்த மற்றொரு ஊழியரை வெளியில் இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கி கும்மாங்குத்து விட்டிருக்கிறார். கடன் கொடுக்க மறுத்ததால் பேக்கரியில் பணிபுரிந்த ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிசிடிவி காட்சி ஆதாரங்களை வைத்து குற்றவாளிகள் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் வணிகர் சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இதே சாயல்குடி பஜாரில் புரோட்டா கொடுக்காததால் கடை உரிமையாளரை wrestling ஸ்டைலில் அடித்து துவைத்த சம்பவம் வியாபாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது கடன் கொடுக்காததால் பேக்கரி ஊழியர்களை அடித்த சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புரோட்டா கடையில் தகராறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி சாயல்குடி தெருக்களில் தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. ஆங்காங்கே ரவுடிகள் உருவாகி ‘இப்பதான் நாங்க ரவுடியா ஃபாமாகி டீ,மிக்சர் வரைக்கும் வந்திருக்கோம், ‘அதுக்குள்ள போலீஸ் எங்களை புடிச்சி உள்ள போட்டா எப்புடி’ என தெனாவட்டாக சுற்றித் திரிகிறார்கள்.

காலை முதல் மாலை வரை கடும் வெயிலில் வேர்வை சிந்தி உழைத்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும் பலருக்கு மத்தியில், உழைக்காமல் அடுத்தவரை மிரட்டி, உருட்டி தின்று கொழுத்து ஊர் சுற்றும் ஒரு கூட்டமும் திரிகிறது. ‘இவர்கள் போலீசாருக்கும் பயப்படுவதில்லை’. ‘நாங்க என்ன செய்யுறதுன்னே தெரியல’ எங்களை போன்ற சிறு வணிகர்கள் இவர்களால் தவிக்கிறோம்’ என சிறு குறு வியாபாரிகளும் வணிகர்களும் புலம்பித் தள்ளுகிறார்கள். எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து காவல்துறை எங்களுக்கு நிரந்தர பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நாம் இது தொடர்பாக சாயல்குடி போலீசாரிடம் பேச்சு கொடுத்தோம், அவர்கள்’ கடந்த ஜனவரி மாதம் புரோட்டா கடை உரிமையாளரை தாக்கிய ரவுடி கும்பலில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் மூன்று பேரை சிறையில் அடைத்து விட்டோம். மேலும், அதன் தொடர்ச்சியாக அந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் மீது  குண்டாஸ் வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கிராமங்கள் நிறைந்துள்ளது. கிராமங்களில் இருந்து மது குடிப்பதற்காக இங்கு வரும் இளைஞர்கள் போதையில் கடைகாரர்களிடம் வம்பிழுத்து விடுகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி யின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இரவு நேர ரோந்து பணியையும் தீவிர படுத்தியுள்ளோம். பொது மக்களுக்கும் வணிகர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்தனர்.

Published at : 14 Mar 2024 01:37 PM (IST)

மேலும் காண

Source link

• Ramanathapuram news Attack on uttar pradest Female Saint – TNN | ராமநாதபுரத்தில் உபியை சேர்ந்த பெண் துறவி மீது தாக்குதல்

Ramanathapuram news Attack on uttar pradest Female Saint – TNN | ராமநாதபுரத்தில் உபியை சேர்ந்த பெண் துறவி மீது தாக்குதல்

இந்து மதத்தில் சந்நியாசம் என்ற நிகழ்வு பெரும்பாலும் மதக் கோட்பாட்டின் இன்றியமையாத அம்சமாகக் கருதப்படுகிறது.  ஆனால், ராமநாதபுரத்தில் பெண் துறவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்கு வங்கிக்காக நடத்தப்பட்ட சம்பவமா என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்து நடை பயணமாக வந்த இளம் பெண் துறவியிடம், பரமக்குடி அருகே  அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் இருந்து ஷிப்ரா பதக்(38) என்ற பெண் துறவி அவரது  தந்தை மற்றும் சகோதரருடன் ராமேஸ்வரம் நோக்கி தென் மாநிலங்கள் வழியாக நடை பயணமாக வந்து கொண்டிருக்கின்றனர். வரும் வழியில் உள்ள சைவ,  வைணவ ஆலயங்களையும் அவர்கள் வழிபட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வந்தடைந்தனர்.

நேற்று சிவராத்திரி என்பதால் அப்பகுதியில் உள்ள  சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டனர்.  பின்னர் இரவு பரமக்குடியில் தங்கிவிட்டு இன்று காலை அங்கிருந்து புறப்பட்டனர். ஷிப்ரா பதக் வழக்கம்போல் நடைபயணமாக சென்று கொண்டிருந்தார்.  இவர்களின் கார் உடமைகளுடன் பின்னால் வந்து கொண்டிருந்தது. பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி இடையே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத 8 நபர்கள் காரை நிறுத்தி இவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்

அப்போது  அதிக ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஷிப்ரா பதக்கின் காரின் மீது தாக்குதல் நடத்தினர். காரின் இடது பக்க கண்ணாடி மற்றும் வாகனத்தில் கட்டியிருந்த ராமர் கொடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் பயந்துபோன ஷுப்ரா பதக் உடனடியாக பரமக்குடி காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

அவரது  புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பரமக்குடி போலீஸார்  விசாரணை மேற்கொண்டனர். மேலும் காரில் வந்த அந்த நபர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் துறவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண

Source link

• Navaskani Lok Sabha Election 2024 Ramanathapuram Constituency DMK Candidate Come Back TNN | Navaskani MP: விமர்சனங்களை வென்ற நவாஸ் கனிமீண்டும் களம் காண்கிறார்

Navaskani Lok Sabha Election 2024 Ramanathapuram Constituency DMK Candidate Come Back TNN | Navaskani MP: விமர்சனங்களை வென்ற நவாஸ் கனிமீண்டும் களம் காண்கிறார்

திமுக கூட்டணி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்தியன் யூனியன் மூஸ்லீம் கட்சி வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் எம்பி நவாஸ் கனியை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதிலும் கடந்த நான்காம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த புது மடம் பகுதியில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததை யாரும் மறக்க முடியாது. அதில்,”ராமநாதபுரம் முஸ்லீம் லீக் MP நவாஸ் கனி அவர்களே ! புதுமடத்தில் நுழையாதீர்கள்!”. ” 2019 எம்.பி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வந்தீர்கள்! வெற்றி பெற்றதும் புதுமடத்தை மறந்தீர்கள்! சொல்லும் படியாக புதுமடத்திற்கு எதுவுமே செய்யவில்லை! ஐந்தாண்டு முடிந்து விட்டது!” ”ஓரிரு மாதத்தில் மீண்டும் தேர்தல் வருவதால், உங்கள் முகத்தை மக்களுக்கு நியாபகப்படுத்த, தேர்தல் விளம்பரத்திற்காக மீண்டும் புதுமடம் வருகிறீர்கள்!’”மக்களை ஏமாற்றும் அரசியல் வியாபாரி MP நவாஸ் கனி அவர்களே! புதுமடம் மக்கள் ஏமாளிகள் அல்ல! மனசாட்சி ஒன்று இருந்தால் புதுமடத்தில் நுழையாதீர்கள். நாங்கள் வரவேற்க மாட்டோம்.” ”ஊர் பொதுமக்கள், புதுமடம்.” இவ்வாறு அந்த சர்ச்சைக்குரிய போஸ்டரில் அச்சிடப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் ‘கண்டா வரச் சொல்லுங்க’எங்க தொகுதி MP ய எங்கேயும் காணல’ என்றும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் என அச்சிடப்பட்டு கேள்விகுறியோடு உள்ள  சுவரொட்டிகள் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது.

‘களமிறங்கிய ஆதரவாளர்கள்’
தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதைக் கண்டு ஆவேசம் அடைந்த நவாஸ் கனியின் ஆதரவாளர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன் ‘மீண்டும் வேண்டும் நவாஸ் கனி’ என்ற சுவரொட்டிகள் மூலம் அதற்கு காரணமாக அவர் செய்த நலத்திட்டங்களை குறிப்பிட்டு அச்சிட்டு பதிலடியாக வால்போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டி இடுகிறார் என இன்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அவருடைய ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முழுவீச்சில் நடத்தி வருகிறது.அந்த வகையில், சமீபத்தில் திமுக கூட்டணி கட்சியனா இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை திமுக ஒதுக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியின் முதல் வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து அறிவித்துள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்திருக்கிறது. சீட்டுக்காகக் கூட்டணி இல்லை. கேட்ட சீட்டு கிடைக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து விலகமாட்டோம். அவர்களும், விடவும் மாட்டார்கள் என்று கூறியிருந்தார் காதர் மொய்தீன். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏற்கனவே வெற்றி பெற்ற ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கியது. தற்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து அறிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்.
‘யார் இந்த நவாஸ் கனி’
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகில் உள்ள குருவாடி என்னும் ஊரில் 14.05.1979 ஆம் ஆண்டு பிறந்தவர். காதர் மீரா கனி – ரம்ஜான் பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் கா. நவாஸ்கனி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து நின்று எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான சென்னை , காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற “தி டைம்ஸ் ஆப் லீக்” என்ற ஆங்கில பத்திரிகை துவக்க விழாவில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள் முன்னிலையில் கா. நவாஸ்கனி தனது 32 வது வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
2011ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலராகவும் அதைத் தொடர்ந்து மாநில கௌரவ ஆலோசகராகவும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் சேவையாற்றி வருகின்றார்.இவர் கடந்த நாடாளுமன்ற  தேர்தலில் ராமநாதபுரத்தில்  போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றவர்.
ராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு அறிமுகமான நவாஸ் கனியை மீண்டும் வேட்பாளராக களமிறக்குகிறது இந்திய யூனியன் முஸ்லீம் லீக். திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

• மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்… மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!

மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்… மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வேலை தேடி வந்து இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களைப் போல, நம் தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கு கட்டுமான கம்பெனி முதல் சிறிய ஹோட்டல்கள் வரை வேலை பார்த்து பொருள் ஈட்டி பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு பல நாட்டினை சேர்ந்தவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அவர்களுக்கு கீழ்பணி புரியும் ஊழியரோ, பணியாளரோ அவர்களின் இல்ல விழாவிற்கு அழைப்பு விடுத்தால் நம்மில் ஒருவராக நம்ம ஊர் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிங்கப்பூர் போன்ற செல்வ செழிப்பு மிக்க நாடுகளிலிருந்து அந்நாட்டின் செல்வந்தர்கள் உள்ளக்கனிவோடு வருகை தருகிறார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு நம் நாட்டு கலாச்சார பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுப்பதில் தமிழர்களுக்கு நிகர் யாரும் இல்லை என்பதை அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு நினைவு படுத்துகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் செந்துார்பாண்டியன் மகள் திருமண விழாவிற்கு வந்த சிங்கப்பூர் நிறுவன முதலாளி மற்றும் அதிகாரிகள், தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து அரசு பள்ளிக்கு நிதி உதவி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகள் திருமணத்திற்கு வருகை தந்து, மணமகள் வேலை பார்க்கும் அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் நிதி உதவி அளித்த சிங்கப்பூர் தொழில் அதிபர்களின் நல்ல மனதை முதுகுளத்தூர் பகுதி பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவர் நீண்ட காலமாக சிங்கப்பூரில் எல் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செந்தூர்பாண்டியன் மகள் முகாவிஜிக்கும், கார்த்தி என்பவருக்கும் திருமணம் இன்று முதுகுளத்தூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த எல் கார்ப்பரேசன் லிமிடெட் இயக்குனர் கூ லின், தொழில் இயக்குனர் ஹான் மிங், திட்ட மேலாளர் டிம் ஆகிய 3 பேரும் வருகை தந்திருந்தனர்.

திருமணத்திற்கு வந்த மூன்று பேரையும் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து குதிரை சாரட்டில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது செண்டை மேளம் முழங்க, சீர் வரிசை தட்டுகளுடன் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் திருமண மண்டபத்தில், தமிழர் முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். பின்னர் கூ லின் தாலி எடுத்து கொடுக்க, மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். பின்னர் அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வாழ்த்தினர்.

பின்னர், செந்தூர் பாண்டியன் மகள் முகாவிஜி தற்காலிகமாக பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற 3 பேருக்கும் பள்ளியின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுத்தும், மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றியும், மலர் தூவியும் வரவேற்றனர்.

அப்போது பள்ளியின் வளர்ச்சிக்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்தனர். தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகளின் திருமணத்திற்கு வந்தது மட்டுமின்றி, மணமகள் பணியாற்றிய பள்ளிக்கு நன்கொடை அளித்த சிங்கப்பூர் தொழிலதிபர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Source link

• மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டிய திமுக எம்எல்ஏக்கு குவியும் பாராட்டு..!

மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டிய திமுக எம்எல்ஏக்கு குவியும் பாராட்டு..!

திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று எதிர்க்கட்சியினரால் பரப்புரை செய்யப்பட்டு வரும் நிலையில், மும்மத பிரார்த்தனையுடன் கீழக்கரையில் அரசு நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தின் செயல் அனைத்து தரப்பினரிடையே பாராட்டு பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார். மேலும் ‘இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இது இந்து மத நிகழ்ச்சியா? மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி.’ என அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் இந்துமத பற்றாளர்கள் இடையே எதிர்ப்பை கிளப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கீழக்கரையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டியுள்ளார் ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத போதகர்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து  பிரார்த்தனையுன் அடிக்கல் நாட்டப்பட்டது. இது கட்சி, மதம் தாண்டி அனைத்து தரப்பு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர்  ஜவாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுகையில், தரம் உயர்த்தப்பட்ட தாலுகா அரசு மருத்துவமனை ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்  கீழக்கரை உரக்கடங்கில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் அயலக அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் ஒன்றிய பெருந்தலைவர் கே டி பிரபாகரன் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Source link

• Ramanathapuram district family is suffering because they left the town near Kadladadi pudhukudiyiruppu village – TNN | ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தவிக்கும் தனி ஒரு குடும்பம்.. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

Ramanathapuram district family is suffering because they left the town near Kadladadi pudhukudiyiruppu village – TNN | ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தவிக்கும் தனி ஒரு குடும்பம்.. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

கிராமங்களில், கிராம நடைமுறைகளை அல்லது கட்டுப்பாடுகளை மீறும் குடும்பங்கள், தனிநபர்களை, கிராம பஞ்சாயத்து தலைவர்களின் முடிவுப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டோருடன், அந்த கிராமத்தைச் சேர்ந்த யாரும் பேசவோ, பழகவோ கூடாது. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்தால், பெரும்பாலும், பல குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா பிள்ளையார்குளம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ‘புது குடியிருப்பு’ கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறார் ராசு. அவர் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தார் அந்த ஊரில் விவசாய தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் ஆடு வளர்ப்பு தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிராமத்தின் பொது காரியங்களுக்காக ஒவ்வொரு நபரிடமும் கணிசமான ஒரு தொகை ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது. அந்த தொகையை ஒவ்வொரு திருவிழாவிற்கு பின்பும் வரவு செலவு கணக்கு பார்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நபர்கள் கிராமப் பொறுப்பில் இருந்து கொண்டு முறையாக கணக்கு பார்க்கவில்லை என கூறப்படுகிறது. அவ்வாறு சரியாக கணக்கு வழக்கு பார்க்காததால் பொறுப்பில் உள்ள நபர்களிடம் ராசு குடும்பத்தார் தட்டி கேட்டதாகவும், இதனால் அந்த குடும்பத்தை தன்னிச்சையாக ஒரு சில தனிப்பட்ட நபர்களின் சுயநலத்திற்காக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அவருடைய இளைய மகன் திருமணத்தன்று பூஜை செய்ய கோவிலை திறக்க மறுத்ததாகவும், மேலும் அந்தப் பகுதியில் குடிநீர் எடுக்கச் செல்ல கூட அந்த குடும்பத்திற்கு அனுமதி இல்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, அந்த கிராமத்தில் இந்த குடும்பத்தினர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், இதுதொடர்பாக கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததோடு, சாயல்குடி காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் அலட்சிய போக்குடன் நடந்து கொண்டதாக வேதனையை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த குடும்பத்தினரின் பாதிப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊரில் ஒருவராக அந்த குடும்பத்தினரையும் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link

• Ramanathapuram News Organ Donor Buried Near RS Mangalam With State Honors – TNN | உடல் உறுப்பு தானம்

Ramanathapuram News Organ Donor Buried Near RS Mangalam With State Honors – TNN | உடல் உறுப்பு தானம்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உடல் உறுப்பு தானம் கொடுத்தவருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் தாலுகா செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் முருகன்,  உறவினரான ராதாகிருஷ்ணன் கடந்த 22ஆம் தேதி ராமநாதபுரத்திற்கு உறவினர் ஒருவர் இறப்பிற்கு சென்று திரும்பியபோது, இரவில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சோழந்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தனர்.
இருவரையும் முதல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முருகன் சிகிச்சை பலனளிக்காமல் மூளை சாவு அடைந்துள்ளார். அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரது நேற்று உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முருகனின் உடல் அவரது சொந்த ஊரான செங்கமடைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவரது உடல் இறுதிச் சடங்குகள் செய்ய எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்யும் பணிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் எறியூட்டப்பட்டது. இறந்த முருகனுக்கு கனகாம்பாள் என்ற மனைவியும் நந்தினி. நதியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அரசு மரியாதை அறிவிப்புக்குப்பின் உடல் உறுப்பு தானம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சுவாமிநாதன், வட்டார மருத்துவர் முனீஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் ஆர் எஸ் மங்கலம் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் பாஸ்கரன் இறுதி மரியாதை செலுத்தினார்.

Source link

• PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

PM ModI Rameshwaram Plan On Day 3 Tn Visit Check The Complete Details Here | PM Modi Rameswaram: ராமேஸ்வரம் அரிச்சல் முனைக்கு செல்லும் பிரதமர் மோடி

PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புன்னிய தீர்த்தங்களில் குளித்து அங்குள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார். தொடர்ந்து இன்றும் அவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார்.
பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

நேற்றைய வழிபாட்டை தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்
இதையடுத்து இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார்
அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார். இதற்காக 11 நாட்களுக்கான சிறப்பு விரதத்தை பிரதமர் மோடி கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது,
கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

• PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

PM ModI Rameshwaram: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன், பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று திருச்சிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். தொடர்ந்து பிற்பகலில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்று நாளை வரை ஆன்மிக்க செயல்பாடுகளில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:

திருச்சி பயணம் முடிந்தவுடன் அங்கிருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்
அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு தரை மார்க்கமாக செல்கிறார்.
அங்கு அக்னி தீர்த்தம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிறப்பு பூஜை செய்து ராமநாதசுவாமியை வழிபாடு செய்கிறார்.
தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்குகிறார்.
இதையடுத்து நாளை காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார்
அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்குறுஇப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையம் போன்ற இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு, இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன
ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link