Tag: ராபர்ட் டவுனி ஜூனியர்

  • Robert Downey Jr. Says He’d ‘Happily’ Return to the MCU in Iron Man character | MCU Iron Man: ”நான் ரெடிதான்” – மீண்டும் அயர்ன் மேன் ஆக வர ஒகே சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்

    Robert Downey Jr. Says He’d ‘Happily’ Return to the MCU in Iron Man character | MCU Iron Man: ”நான் ரெடிதான்” – மீண்டும் அயர்ன் மேன் ஆக வர ஒகே சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்


    MCU Iron Man: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் சீக்ரெட் வார்ஸ் படத்தில், அயர்ன்மேன் கதாபாத்திரம் இடம்பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
    ரசிகர்களை கவர்ந்த அயர்ன்மேன்:
    அதீத சக்திகளை கொண்டு உலகிற்கு வரும் ஆபத்துகளை தடுக்கும், சூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்டு மார்வெல் நிறுவனம் ஒரு பிரமாண்டமான சினிமாடிக் யூனிவெர்ஸை கட்டமைத்துள்ளது. இதன் தொடக்கமாகவும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாகவும் இருந்தது அயர்ன் மேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜுனியர் அயர்ன் – மேன் ஆகவே வாழ்ந்து நடிகர்களை கவர்ந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களால் திரையில் கொண்டாடப்பட்ட அந்த கதாபாத்திரம், கடந்த  2019ம் ஆண்டு வெளியான எண்ட் கேம் திரைப்படத்தில் உலகை காக்க உயிர் தியாகம் செய்தது. இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து, மார்வெல் படங்களில் அயர்ன்மேன் கதாபாத்திரம் வருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
    ”ஒகே” சொன்ன ராபர்ட் டவுனி ஜுனியர்:
    இந்நிலையில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த ராபர்ட் டவுனி ஜுனியரிடம், மீண்டும் அயர்ன் மேன் கதபாத்திரத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில், “மகிழ்ச்சியாக வருவேன். அயர்ன்மேன் கதாபாத்திரம் என் டிஎன்ஏவின் மிகவும் ஒருங்கிணைந்த பகுதியாகும். அந்த வேடம் என்னைத் தேர்ந்தெடுத்தது, நான் எப்போதும் சொல்கிறேன், மார்வெல் நிறுவன இயக்குனர் கெவின் ஃபேகிக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம் . இது ஒரு தோல்வி பந்தயம். அவர் தான் வீடு. அவர் எப்போதும் வெற்றி பெறுவார்” என்று ராபர் டவுனி ஜுனியர் தெரிவித்தார்.
    அதோடு, கடந்த 2018ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தான், மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் ஒட்டுமொத்த முக்கிய கதாபாத்திரங்களையும் கடைசியாக ஒரே நேரத்தில் பார்த்தேன். அது மிகவும் முக்கியமான இரவு அதை என்றும் மறக்கமாட்டேன்” என ராபர் டவுனி ஜுனியர் கூறினார்.
    ரசிகர்கள் மகிழ்ச்சி:
    எண்ட் கேம் படத்தை விட இரண்டு மடங்கு பிரமாண்டமாக, அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் படத்தை தயாரிக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த பொருட்செலவுக்கு நிகரான வருவாயை ஈட்ட, அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க ராபர்ட் டவுனி ஜுனியர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
    கெவின் ஃபேகி சொல்வது என்ன?
    அயர்ன்மேன் கதாபாத்திரத்தை திரும்ப கொண்டு வருவது தொடர்பாக கடந்த ஆண்டு கெவின் ஃபேகியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நாங்கள் அந்த தருணத்தை [டோனி ஸ்டார்க்கின் மரணத்தை] அப்படியே வைத்திருக்கப் போகிறோம், அந்த தருணத்தை மீண்டும் தொடமாட்டோம், அதை அடைய நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்தோம். அதை எந்த வகையிலும் வீணாக்க நாங்கள் விரும்பவில்லை” என கெவின் ஃபேகி தெரிவித்தார். இதனால், அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர் மீண்டும் தோன்றுவாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

    மேலும் காண

    Source link

  • Director Christopher Nolan Recalls His Friend Actor Heath Ledger After Winning Golden Globe For Best Actor

    Director Christopher Nolan Recalls His Friend Actor Heath Ledger After Winning Golden Globe For Best Actor

    கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) தனது நண்பர்  மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜரை நினைவு கூர்ந்தார்.
    கோல்டன் க்ளோப்
    ஹாலிவுட்டில் ஆஸ்கர்  விருதிற்கு நிகரான அந்தஸ்த்தைப் பெற்ற ஒரு விருது கோல்டன் குளோப். 81 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பல்வேறு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான விருதுகளை ஓப்பன்ஹெய்மர் படக்குழுவே தட்டிச் சென்றது.
    ஓப்பன்ஹெய்மர்
    கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி, எமிலி பிளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஓப்பன்ஹெய்மர். அனு குண்டை கண்டுபிடித்த இயற்பியல் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்தப் படம் இந்தியளவில் மட்டும் 100 கோடிகளுக்கும்  மேலாக வசூல் செய்தது.
    இந்தப் படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காட்சிகளில் பகவத் கீதையின் வசனங்களை கதாநாயகன் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றதால் இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் வெளியாகிய படங்களில் பார்பீ மற்றும் ஓப்பன்ஹெய்மர் படம் அதிக வசூல் ஈட்டியது . இந்நிலையில் இன்று நடைபெற்ற கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மொத்தம் ஐந்து விருதுகளை ஓப்பன்ஹெய்மர் படம் வென்றது. இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோஃபர் நோலன் வாங்கினார். அப்போது மறைந்த தனது நண்பன் மற்றும் நடிகர் ஹீத் லெட்ஜரை அவர் நினைவு கூர்ந்தார்.
    16 வருடங்களுக்குப் பிறகு அதே மேடை
    கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய பேட்மேன் சீரிஸின் இரண்டாம் பாகம் தி பேட்மேன் டார்க் நைட் படத்தில் ஜோக்கராக நடித்தார் ஹீத் லெட்ஜர். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக கடுமையான உழைப்பை செலுத்திய அவர் அனைவரையும் மிரளவைத்தார்.
    முந்தைய படங்கள் தோல்வியடைய பேட்மேன் படம் அவருக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. இப்படியான நிலையில் ஹீத் லெட்ஜர் எதிர்பாராதவிதமாக தனது அப்பார்ட்மெண்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஓவர் டோஸாக மருந்து உட்கொண்டதால் அவர் உயிரிழந்தார்.3 அந்த ஆண்டு அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பின் அவர் சார்பில் இந்த விருதை கிறிஸ்டோஃபர் நோலன் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
    இன்று சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுக்கொள்ள 16 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மேடையில் அவர் தனது நண்பர் ஹீத் லெட்ஜரை நினைவு கூர்ந்து பேசினார். அன்று  நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். இன்று கீழே அமர்ந்து என்னை அன்பான ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் ராபர்ட் டெளனி இதேபோல் அன்றும் என்னை பார்த்து எனக்கு ஆதரவு தெரிவித்தார்.  இந்த விருதை ரசிகர்களின் சார்பில் தான் ஏற்றுக் கொள்வதாக கூறி தனது படத்தில் நடித்த நடிகர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

    Source link