Tag: பிக்பாஸ் சீசன்7

  • Bigg Boss Season7 Tamil Mani And Raveena Nixan Controversy Speeches Goes On Viral | Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி

    Bigg Boss Season7 Tamil Mani And Raveena Nixan Controversy Speeches Goes On Viral | Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி

    Bigg Boss 7 Tamil Mani: பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று மணி கோபத்துடன் செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணி தன்னை ஒதுக்குவதை நிக்சனிடம் கூறி புலம்பும் ரவீனாவை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர். 
     
    நாளையுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெறும் நிலையில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வென்ற விஷ்ணு, தினேஷ், மாயா, அர்ச்சனா மற்றும் மணி உள்ளனர். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக் கொண்டாட்டமாக முன்னதாக எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். 
     
    அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனா, மணியிடம் பேச முயற்சிக்கிறார். ஆனால் ரவீனாவிடம் பேச மறுப்பு தெரிவிக்கும் மணியின் வீடியோ டிரெண்டாகி வருகிறது. மணியிடம் பேசும் ரவீனா, ”எதுக்கு என்னை அவாய்ட் பண்றீங்க.. எல்லாத்தையும் மறந்துடுங்க.. வெளியே சென்று பேச நிறைய இருக்கு” என்கிறார். அதற்கு பதிலளித்த மணி, “ எனக்கு செட் ஆகலனா செட் ஆகல தான். எனக்கு நிறைய இருக்கு ஏகப்பட்டது இருக்கு” என்று கூறிக் கொண்டே ரவீனாவிடம் இருந்து எழுந்து செல்கிறார். 

     
    தன்னிடம் மணி அப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாத ரவீனா, நிக்சனிடம் புலம்பியுள்ளார். நிக்சனிடம் பேசிய ரவீனா, “ நீ என்னை புரிந்து கொண்ட அளவுக்கு அவன் என்னை புரிந்து கொள்ளவில்லை” என்றார். மேலும் மணி தன்னை ஓவராக பிடித்து வைத்ததை போல் ரவீனா பேசியுள்ளார். ரவீனாவின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்ஸ் “ பிக்பாஸில் உன்னை பற்றி பேசுவதற்கு மனிதான் காரணம். பேச்சை நேரத்துக்கு ஏற்றார் போல் மாற்றி பேச வேண்டாம்” என காட்டமாக விமர்சித்து வருகின்றனர். 
     

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரவீனா மற்றும் மணியின் நட்பு குறித்து பரவலாக நெட்டிவ் கருத்துகள் எழுந்தன. பிக்பாஸ் போட்டியாளர்கள் கூட இருவரும் காதலிப்பதாக கூறி வந்தனர். பிக்பாஸ் டாஸ்க்குகள் ரவீனாவுக்காக மணி விளையாடுவதாகவும் குற்றாம் சாட்டினர். சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரீஸ் டாஸ்க்கில் ரவீனாவின் விளையாட்டு மணியால் தான் கெடுவதாக ரவீனாவின் அம்மா குற்றம் சாட்டியிருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ரவீனாவை சுயமாக முடிவெடுக்க விடாமல் மணி தடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். 
     

     
     

    Source link

  • Bigg Boss Season7 Tamil Vijay Varma Back In Midweek Eviction | Bigg Boss 7Tamil Vijay Varma: பிக்பாஸ் வீட்டில் ஷாக்

    Bigg Boss Season7 Tamil Vijay Varma Back In Midweek Eviction | Bigg Boss 7Tamil Vijay Varma: பிக்பாஸ் வீட்டில் ஷாக்

    Bigg Boss 7Tamil Vijay Varma: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
     
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொருஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 
     
    முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த பிக்பாஸ் சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள், 5 வைல்டு கார்டு என்ட்ரி, மிட் வீக் எவிக்‌ஷன் என சற்று மாற்றங்களைக் கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்துள்ளது. பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கடந்த வாரம் விசித்ரா எவிக்‌ஷன் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மூத்த போட்டியாளராக விசித்ரா இருந்தாலும் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வந்தார். இதனால், விசித்ரா இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறினார். 
     
    அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு, தினேஷ், விஜய் வர்மா, மாயா, அர்ச்சனா, மணி இருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்த விஜய் வர்மா மிட்வீக் எவிக்‌ஷனில் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்த விஜய் வர்மா போட்டியாளர்களிடம் கோபத்தை காட்டியதுடன், வன்முறையாகப் பேசினார். இதனால், விமர்சனத்துக்கு ஆளான அவர் 26ஆவது நாளில் எவிக்ட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து கடந்த 56ஆவது நாளில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு விஜய் வர்மா வந்தார். 

    ரீ என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா, இந்த முறை நிதானித்து கேம் ப்ளே ஸ்ட்ரேட்டஜியை கெட்டியாகப் பிடித்து விளையாடி வந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேறியது அவரது ஃபேன்பேஸை அப்செட் செய்துள்ளது. 
     

     
     
     
     
     

    Source link

  • Bigg Boss Season7 Tamil Vichitra Eviction Review By Vanitha Vijayakumar | Bigg Boss 7Tamil Vanitha: ”விசித்ரா பொய்யானவர்”

    Bigg Boss Season7 Tamil Vichitra Eviction Review By Vanitha Vijayakumar | Bigg Boss 7Tamil Vanitha: ”விசித்ரா பொய்யானவர்”

    Bigg Boss 7Tamil Vanitha: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் என்றும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றுலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்தது. 
     
    பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறிய நிலையில், நேற்று விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். 
     
    ஆரம்பத்தில் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், தனது அனுபவம் மூலம் 95 நாட்களை விசித்ரா இப்போட்டியில் கடந்தார். மூத்த போட்டியாளராக இருந்த போதும், ஒவ்வொரு வாரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கான ஃபேன் பேஸ் வைத்திருந்த விசித்ரா, கடந்த வாரம் முழுவதும் தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி விமர்சனத்துக்கு ஆளானார். அதுவும் விசித்ரா எலிமினேட் செய்யப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
     
    இந்த நிலையில் விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், விசித்ரா வெளியேற்றம் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நம்பிக்கை தந்திருப்பதாகக் கூறியுள்ளார். இத்தனை நாட்கள் வாங்கிய நல்ல பெயரை ஒரே வாரத்தில் தடம் மாறி விசித்ரா கெடுத்துக் கொண்டதாகவும், அவர் செய்த சில சம்பங்கள் முகம் சுளிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், மக்களின் விருப்பத்தின் பேர் விசித்ரா வெளியேற்றப்பட்டதாகவும், அதுதான் நியாயமானது என்றும் வனிதா விஜய்குமார் விமர்சித்துள்ளார். 
     
    தொடர்ந்து பேசிய அவர், பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியது அவர் வாழ்வில் எடுத்த சரியான முடிவு என்று கூறியுள்ளார். அர்ச்சனா பற்றி பேசிய வனிதா, அர்ச்சனா தனக்கு ஒரு பிஆர் டீம் வைத்திருப்பாதாகவும், அவரே அர்ச்சனாவை நிகழ்ச்சியில் நன்றாக காட்டிக் கொள்ள வேலை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். 
     
    மாயாவிற்கு வீட்டில் இருக்கும் முக்கால்வாசி பேர் ரசிகர்களாக இருப்பதாகவும், அவர்களில் தானும் ஒருவர் வனிதா கூறியுள்ளார்.
     

     

    Source link