Tag: பாஸ் என்கிற பாஸ்கரன்

  • arya santhanam boss engira bhaskaran to get rerelease in chennai kamala cinemas

    arya santhanam boss engira bhaskaran to get rerelease in chennai kamala cinemas


    14 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தை, இப்போது மீண்டும் சென்னை கமலா திரையரங்கம் வெளியிடுகிறது
    அடுத்த ரீரிலீஸ் என்ன ?
     2024 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தமிழில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவிலான வெற்றிபெறவில்லை. இதனால் திரையரங்கத்தின் லாபமும் கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாக பிரேமலு, ப்ரமயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட தமிழ் படங்களை தூக்கிவிட்டு இந்தப் படங்களுக்கான காட்சிகளை அதிகரித்தன திரையரங்கங்கள். பெரிதாக படங்கள் வெற்றிபெறாத காரணம் ஒரு பக்கம் என்றால் பழைய படங்களை மீண்டும் திரையரங்கத்தில் பார்க்கும் ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. இதனால் திரையரங்குகள் பழைய படங்களை மீண்டும் திரையிட்டு வருகின்றன. இந்த படங்களில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். விஜய் , அஜித் , ரஜினி ,. கமல் என எல்லா ஸ்டார்களின் படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன. அந்த வரிசையில் அடுத்தபடியாக வெளியாக இருக்கும் படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன்
    பாஸ் என்கிற பாஸ்கரன்

    Revealing our next re-release at your Kamala Cinemas 💥“Ooru la pathu padhinanju friend vechirkavan laam sandhoshama irukaan, orey oru friend ah vechikitu naan padra avastha irukey, aiyayayayayo”Nanbenda !Bookings soon@arya_offl @iamsanthanam @NayantharaU @rajeshmdirector
    — Kamala Cinemas (@kamala_cinemas) March 12, 2024

    கடந்த 2010 ஆம் ஆண்டு எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்படத்தின் கமர்ஷியல் வெற்றி ஆர்யாவின் கரியரில் ஒரு திருப்புமுனையாக இருந்த படம் என்றே சொல்லலாம். சந்தானம் , நயன்தாரா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஆர்யா சந்தானத்தின் கெமிஸ்ட்ரிக்காகவே ஓடிய இந்தப் படத்தின் வசனங்கள் இன்று வரை ரசித்து பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்தப் படத்தை சென்னை கமலா திரையரங்கம் தற்போது வெளியிட இருக்கிறது. விரைவில் இந்தப் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்க இருக்கின்றன.
    10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி
    ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர்  ஆர்யாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி படம் ஒன்றில் மிக விரைவில் நடிக்க இருக்கிறோம் என சர்ப்ரைஸ் தகவல் கொடுத்தார். இந்தப் படத்திற்கு கவுண்டமணியின் டயலாக் ஒன்றை டைட்டிலை வைத்துள்ளதாகவும் சந்தானம் தெரிவித்துள்ளார். ஆர்யா மற்றும் சந்தானம் கடைசியாக ”வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க” படத்தில் இணைந்து நடித்தார்கள் . தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்யாவின் நட்பிற்காக சந்தானம் மீண்டும் ஒருமுறை காமெடியனாக நடிக்க இருக்கிறார்.

    மேலும் காண

    Source link

  • Re-release movies are getting tremedous response from audience especially college students | Re-release movies: பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ஏன்?

    Re-release movies are getting tremedous response from audience especially college students | Re-release movies: பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது ஏன்?


    தமிழ் சினிமாவில் வாரம்தோறும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. பெரிய ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்களின் வருகையும் அதிகரித்து வந்தாலும் எதிர்பார்த்த அளவு அவை பெரிய அளவில் வரவேற்பை பெற தவறி விடுகிறது. ஸ்டார் நடிகர்களின் பேஸ் வேல்யூவிற்காக ஓரளவுக்கு வரவேற்பையும் வசூலையும் பெற்றாலும் திரைக்கதை அளவில் மிகவும் சுமாராகவே இருக்கின்றன. அதனால் அவை ரசிகர்களின் மனதில் நிலைக்காமல் போய்விடுகின்றன. 
    ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களை திரையரங்கில் மறுபடியும் ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது தான் தற்போதைய ட்ரெண்ட். அப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைதுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சென்னையில் மிகவும் பிரபலமான திரையரங்கமான கமலா திரையரங்கத்தின் திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல் பதில் அளித்துள்ளார்.
     

    தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ‘3’ படத்தை ஒரு ஷோ மட்டும் போட்டோம். அந்த சமயத்துல நிறைய ஆடியன்ஸ் டிக்கெட் கிடைக்காம திரும்பி போனாங்க. அப்ப தான் எங்களுக்கு ஒரு ஐடியா வந்தது. இது போல ஹிட் அடித்த பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்தால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வரும் என தோணுச்சு. 
    இது போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீஸாகும் போது எங்களை மாதிரி இளைஞர்கள் எல்லாரும் ரொம்ப சின்ன பசங்களா, ஸ்கூல் படிக்குற பசங்களா இருந்து இருப்போம். அதனால் இந்த படங்களை தியேட்டர்ல பாக்குற அனுபவம் எங்களுக்கு கிடைக்கல. என்ன தான் போன்ல, டிவில இந்த படங்களை பாத்தாலும், தியேட்டர்ல பாக்குற அந்த எஃபெக்ட், பீல்லே தனி. அதனால மக்களை தியேட்டருக்கு வர வைக்கிறதுக்கு தான் ரீ ரிலீஸ் கான்செப்டை நாங்க பண்ணோம். டிக்கெட் விலை அதிகமா இருக்குன்னு நிறைய பேர் பீல் பண்ணதால அதை குறைச்சா நிறைய மக்கள் தியேட்டர் வருவாங்கனு டிக்கெட் விலை வெறும் 49 ரூபாய், 69 ரூபாய்க்கு தான் போட்டோம். ரீ ரிலீஸ் படங்களுக்கு இப்படி வைச்சா நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என நினைச்சோம். 
    அடுத்ததா தியேட்டருக்கு வர மக்களை சந்தோஷப்படுத்தனும் என்பதற்காக  அவர்களுக்கு பிடித்த பாடலை ஒன்ஸ்மோர் போட்டு சவுண்ட் கம்மியா வைக்குறேன், நீங்க எல்லாரும் பாடுறீங்களானு கேட்டேன். அது நல்லா ஒர்க் அவுட்டாகி  சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆச்சு. ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சு இருக்கு. காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் தான் அதிகமா வராங்க. அவங்களோட வைப் வேற லெவலில் இருக்கு. பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் அண்ணாமலை, சிவா மனசுல சக்தி படம் எல்லாம் போட்டோம்.  வெளியில இருக்க பேனரை பார்த்து இது கமலா தியேட்டரா இல்ல ‘கே’ டிவியா கேக்குறாங்க. 
    அடுத்ததாக பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ரீ ரிலீஸ் பண்ணலாம் என பிளான் பண்ணியிருக்கோம்” என விஷ்ணு கமல் கூறி இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.  

    மேலும் காண

    Source link