Tag: எம். எஸ்.பாஸ்கர்

  • parking movie crew celebrates 75 days releases special review

    parking movie crew celebrates 75 days releases special review


    பார்க்கிங் படன் வெளியாகி 75 நாட்கள் நிறைவடையும் நிலையில் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
    பார்கிங்
    அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய படம் பார்க்கிங். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர்  நடித்துள்ளார்கள். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்த நிலையில், ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இரண்டு ஆண்களுக்கு இடையில் ஏற்படும் ஈகோ  எந்த அளவிற்கு தீவிர பிரச்சனையாக மாறுகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் எப்படி பாதிக்கப் படுகின்றன என்பதை மையமாக வைத்து  நகைச்சுவை , செண்டிமெண்ட். த்ரில்லர் என சுவாரஸ்யமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது.
    பார்க்கிங் படம் வெளியான சமயத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் படத்திற்கான வரவேறு குறையாமல் இருந்தது.
    பார்க்கிங் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னையில் இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தின் இயக்குநருக்கு தங்க வளையம் பரிசாக அணிவித்தார். இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் காம்பினேஷனை விட ஹீரோ வில்லன் காம்பினேஷன் ரசிகர்களால் அதிகம் பாராட்டப் பட்டது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் ஆகிய இருவருக்கு இடையில் இருந்த கெமிஸ்ட்ரி படத்தைத் தாண்டி நிறைய நிஜ மனிதர்களுடன் தொடர்பு படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
    75 நாள் கொண்டாட்டம்

    What if Ilamparuthi and Eswar meet again? Celebrating 75 days of #Parking with a deleted scene Watch it now on Hotstar #75DaysOfParking🚗@iamharishkalyan @Actress_Indhuja @sinish_s @Sudhans2017 @ImRamkumar_B @SoldiersFactory @PassionStudios_ pic.twitter.com/nZd14Ao6UU
    — Ramesh Bala (@rameshlaus) February 14, 2024

    திரையரங்கத்தைத் தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது பார்க்கிங் திரைப்படம்.  இந்நிலையில் இன்றுடன் 75 நாட்களை பார்க்கிங் படம் நிறைவு செய்துள்ளது. இதனைத் கொண்டாடும் விதமாக படக்குழு சார்பாக சிறப்பு வீடியோ ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யான் மற்றும் எம்.எஸ் பாஸ்கரின் கதாபாத்திரங்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ள நேர்ந்தால் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்கிற வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. 

    மேலும் படிக்க ; Yezhu Kadal Yezhu Malai : இன்று மாலை வெளியாகிறது ஏழு கடல் ஏழு மலை ஃபர்ஸ்ட் சிங்கிள்! 
    Sai Pallavi: நாக சைதன்யாவுடன் ரொமான்ஸ்.. காதலர் தின வீடியோ வெளியிட்ட சாய் பல்லவி!

    மேலும் காண

    Source link

  • “ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

    “ஏதோ ஒரு சாமி” நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கல கல பேச்சு | MS Bhaskar Funny Speech In Vadakkupatti Ramasamy

    TN Update
    26 Jan, 07:02 PM (IST)

    ”த்ரிஷா, நயன்தாரா பத்திலாம் கேள்வி கேட்காதீங்க?” – மன்சூர் அலிகான் கல கல பேச்சு

    Source link

  • Keerthy Suresh Raghu Thatha Movie Teaser Released

    Keerthy Suresh Raghu Thatha Movie Teaser Released

    கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நடித்து இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
    கீர்த்தி சுரேஷ்
    2015ஆம் அண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் பப்ளி மருத்துவராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.
    சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தொடர்ச்சியாக ரஜினிகாந்த், விஜய், என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் “நடிகையர் திலகம்” என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைக் கொண்டு எடுக்கப்பட்ட ‘மகாநடி’ படத்தில் நடித்திருந்தார்.
    நடிப்புக்கே பெயர் போன சாவித்ரி போல், அவரது ஒவ்வொரு அசைவுகளையும் மீண்டும் திரையில் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்ரியை கண்முன் காட்டிய கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது கிடைத்தது. வழக்கமான கமர்ஷியல் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து பென் குயின், சாணி காயிதம் போன்ற எக்ஸ்பெரிமெண்டலான படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புதிய படத்திற்கு ரகு தாத்தா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளிம்ஸை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.
    ரகு தாத்தா
    ஹாம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சுமன் கும் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக ரகு தாத்தா படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை தனது எக்ஸ் தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

    Get ready to experience the ultimate comedy extravaganza that celebrates the misadventures of Kayalvizhi in #Raghuthatha, a comedy like no other. Coming soon to a cinema near you!கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள்.#ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில்… pic.twitter.com/JbxqS1uvx8
    — Keerthy Suresh (@KeerthyOfficial) January 12, 2024
    ரகு தாத்தா படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப் பட இருக்கிறது.
    மேலும் படிக்க : Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

    Source link