t20 world cup 2024 jay shah provides big updates on rishabh pant mohammed shami and kl rahul and team india | T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு ஷமி இல்லைய..? அப்போ! ரிஷப் பண்ட்


2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பண்ட் பங்கேற்க முடியுமா இல்லையா என்பது குறித்து ஜெய் ஷா ஒரு பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளார். 
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்பிறகு, இந்திய அணி வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் பங்கேற்க உள்ளனர். இந்த ஐபிஎல் போட்டியானது வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. 
ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பாக, முகமது ஷமி, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்தியா திரும்பியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடக்கும் தொடருக்கு முகமது ஷமி திரும்புவார். (இதன்மூலம் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில் ஷமி விளையாட மாட்டார் என்று தெரிகிறது) கே.எல்.ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். வலது நாற்புறத்தில் (தொடை தசைகள்) வலி ஏற்பட்டதால் ராகுலால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி நான்கு போட்டிகளில் விளையாட முடியவில்லை. லண்டனில் சிகிச்சை பெற்ற பிறகு, கே.எல். ராகுல் ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தார். 
ரிஷப் பண்ட் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா..?
ரிஷப் பண்ட் ஐபிஎல் போட்டிக்கு திரும்ப தயாராக இருப்பதாக பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பயிற்சியின்போது ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் செய்கிறார், நன்றாக கீப்பிங் செய்கிறார். விரைவில் அவர் உடற்தகுதி பெற்றுவிட்டார் என அறிவிப்போம். பண்ட் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமும் கூட.. அவர் எங்களுக்கு முக்கியமான வீரர். ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்று பார்ப்போம், அதன்பிறகே, உலகக் கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என்பதை சொல்ல முடியும்.” என்று குறிப்பிட்டு இருந்தார். 
ரிஷப் பண்ட் எப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று ஒவ்வொரு இந்திய ரசிகர்களும் காத்திருக்கின்றனர். ஐபிஎல் 2024ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பண்ட் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. இதில், பண்ட் எப்படி சிறப்பாக செயல்படுகிறார் என்பது பொறுத்தே இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பது குறித்து தெரிய வரும். 
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், ரிஷப் பண்ட் ஒரு பெரிய கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு, அவர் நீண்ட காலமாக கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்தார். பண்ட் சமீபத்தில் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
டி20 உலகக் கோப்பை எப்போது..? 
இந்த முறை டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இந்திய அணி வருகின்ற ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. இதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக ஜூன் 9ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12ம் தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் ஜூன் 15ம் தேதி இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் கனடாவுக்கு எதிராக விளையாடுகிறது. 

மேலும் காண

Source link