So Many Things Going Wrong In The Tournament Manoj Tiwary Wants Ranji Trophy To Be Scrapped Off | Manoj Tiwary: ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு மதிப்பதில்லை

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்க அமைச்சருமான மனோஜ் திவாரி ரஞ்சிக் கோப்பையை அழித்துவிடுங்கள் என மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் லீக், கிரிக்கெட் தொடர்கள் என்றால் அதில் முதலிடம் வகிப்பது ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பைதான். மற்றவகை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா முழுவதும் பரவலாக நடைபெற்றாலும் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பை மீது உள்ள எதிர்பார்ப்பும் வரவேற்ப்பும் மற்ற தொடர்களுக்கு இல்லை. இவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் வேறு. ஆமாம் ஐபிஎல் லீக் கிரிக்கெட்டினால் இந்தியாவில் ஏற்படும் வியாபாரம் அதனால் கிடைக்கும் வருவாய் அனைத்தும் மொத்தமாக ரஞ்சிக் கோப்பையை ஓரம் கட்டிவிட்டது. 
இந்திய கிரிக்கெட் அணியில் இன்றைக்கு ஒரு வீரர் தேர்வு செய்யப்படுகின்றார் என்றால், தேர்வுக்குழு தரப்பில் இருக்கும் பார்வை, ஐபிஎல் லீக்கில் அந்த வீரரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை வைத்து ஒரு வீரரை தேர்வு செய்து வருவதைப் பார்க்க முடிகின்றது. ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தாலும் அந்த வீரரை தேர்வுக் குழுவினர் பொருட்படுத்துவதே இல்லை எனும் நிலை இன்றைக்கு உள்ளது என பல வீரர்களின் ஆதங்கமாக உள்ளது. 
இந்திய அணியில் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணியின் ஆகாஷ் தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதுதான் என அவரே தெரிவித்துள்ளார். ஆனால் பல ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் புஜாரா பலமுறை தனது திறமைகளை வெளிப்படுத்தியும் அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக் குழு தேர்வு செய்யவே இல்லை. இது இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இப்படியான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்கத்தில் அமைச்சராக உள்ள மனோஜ் திவாரி, “ ரஞ்சிக் கோப்பையை முற்றிலும் அழித்து விடுங்கள். ஐபிஎல் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் தேர்வுக்குழு, ரஞ்சிக்கோப்பையில் அபாரமாக விளையாடும் வீரர்கள் கண்டுகொள்வதேயில்லை. அழகையும் முக்கியத்துவத்தையும் இழந்து வரும் ரஞ்சிக் கோப்பையை அழித்துவிடுங்கள். இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேராக உள்ள ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டை அடுத்த ஆண்டில் இருந்து நடத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளார். 

Source link