SL vs ZIM T20I: 3 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 36 வயதான அனுபவமிக்க ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். மேத்யூஸ் கடைசியாக கடந்த 2021ல் இலங்கைக்காக டி20 போட்டியில் விளையாடினார்.

முன்னதாக, மேத்யூஸ் கடந்த 2021ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இலங்கை டி20 அணியின் முழுநேர கேப்டனாக வனிந்து ஹசரங்க பொறுப்பேற்கவுள்ளார். அதேசமயம், சரித் அசலங்கா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக நீண்டநாளுக்கு பிறகு இலங்கை அணிக்கு திரும்பிய வனிந்து ஹசரங்கவை தொடர்ந்து, நூவான் துஷாரா, அகிலா தனஞ்செயா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் களம் காணுகின்றனர். நூவான் துஷாரா அவ்வப்போது இலங்கை அணியில் உள்ளேயும், வெளியேயும் வருவதும் போவதுமாக இருக்கிறார். உலகெங்கிலும் உள்ள உரிமையியல் லீக்குகளில் சிறப்பாக செயல்பட்ட 29 வயதான நூவான் துஷாரா, 2024 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

இலங்கை டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வனிந்து ஹசரங்க, காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் விளையாடவில்லை. அதேபோல், ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி 16ம் தேதியும், மூன்றாவது போட்டி 18ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.

டி20 உலகக் கோப்பை 2024க்கு தயாராகும் இலங்கை அணி:

அதேபோல் தனஞ்செயா டி சில்வா மீண்டும் இலங்கை அணி திரும்பியது சுழற்பந்து வீச்சை வலுப்படுத்தியுள்ளது. இந்த அணி தேர்வு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த அணிக்கு கமிந்து மெண்டிஸ் திரும்பியுள்ளார். அதேநேரத்தில் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட துனித் வெலால்ஜே மற்றும் சமிக்கா கருணாரத்னா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். உடற்தகுதி நிருபிக்கப்பட்ட பின்னரே, பதும் நிஸ்ஸங்க அணியில் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி:

வனிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, தனஞ்சய் டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க (ஃபிட்) , துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, மதிஷ பத்திரன, நுவான் துஷார, அகிலா தனஞ்செயா

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தான நிலையில், நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Source link