Shreyas Iyer is the only Indian captain to smash 10 or more sixes in an IPL innings.


ஐ.பி.எல் சீசன் 17:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. 
அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போதே வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கேப்டன் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கேப்டன்:

Shreyas Iyer is the only Indian captain to smash 10 or more sixes in an IPL innings. pic.twitter.com/cwKMncgtBX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 13, 2024

இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வழிநடத்தினார். அந்தவகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 26 வது லீக் போட்டியில் டெல்லி டேர்வில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.  இதில் முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் அப்போது டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 40 பந்துகள் களத்தில் நின்று 93 ரன்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அதன்படி, ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக இருந்து ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற சாதனையை படைத்தார்.
அதே நேரம் ஒட்டுமொத்த ஐபிஎல். வரலாற்றிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்களாக சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முதல் இடத்தில் இருக்கிறார். அதாவது அவர் ஐபிஎல் தொடரில் 214 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி இருக்கிறார். அந்த வகையில் விராட் கோலி 168 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். மூன்றாவது இடத்தில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 151 சிக்ஸர்களுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link