Republic Day Guest: குடியரசு தினத்தன்று அழைக்கப்பட்ட கடந்த கால சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் இதோ..

இந்தியாவின் மிக மிக முக்கியமான இரண்டு தினங்களாக கொண்டாடப்படுவது சுதந்திர தினமும், குடியரசு தினமும் ஆகும். 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1950ம் ஆண்டு குடியரசு நாடு ஆனது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடே கோலாகலமாக உள்ளது. டெல்லி கடமைப்பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றார். குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்றுள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர் அல்லது தலைமை விருந்தினராக முக்கியத் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். தலைமை விருந்தினரைத் தேர்ந்தெடுப்பது ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கும். வெளியுறவுக் கொள்கை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், அரசியல், பொருளாதாரம், மூலோபாயம் மற்றும் இராணுவ காரணிகளுடன் தலைமை விருந்தினரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமை விருந்தினரை அழைப்பதன் முதன்மை நோக்கம் இந்தியாவிற்கும் விருந்தினர் நாட்டிற்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதாகும்.

சிறப்பு விருந்தினர்களின் பட்டியல்:

2023 ஆம் ஆண்டு அப்தெல் ஃபத்தா எல்-சிசி, எகிப்து ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

2022 மற்றும் 2021 – கோவிட் தொற்றுநோய் காரணமாக தலைமை விருந்தினர்  அழைப்பு இல்லை

2020 – பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டார்

2019 – சிரில் ராமபோசா, தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி

2018 – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) மாநிலங்களின் தலைவர்கள்

2017 – முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர்

2016 – பிரான்சுவா ஹாலண்டே, பிரான்ஸ் ஜனாதிபதி

2015 – பராக் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி

2014 – ஷின்சோ அபே, ஜப்பான் பிரதமர்

2013 – ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், பூட்டான் மன்னர்

2012 – யிங்லக் ஷினவத்ரா, தாய்லாந்து பிரதமர்

2011 – சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, இந்தோனேசியாவின் ஜனாதிபதி

2010 – லீ மியுங் பாக், தென் கொரியாவின் ஜனாதிபதி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியுடன் இன்று, இந்தியாவில் இருந்து  95 பேர் கொண்ட அணிவகுப்புக் குழுவும், பிரான்சில் இருந்து 33 பேர் கொண்ட இசைக்குழுவும் கடமை பாதையில் நடைபெற்ற அணிவகுப்பை பார்வையிட்டார்.  குடியரசு தின அணிவகுப்பில் பிரெஞ்சு விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பல்நோக்கு டேங்கர் போக்குவரத்து விமானங்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Source link