பிரேசிலில் உள்ள அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் மாதிரி சரிந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் நியூ யார்க் சிட்டியில் சுதந்திர தேவி சிலை உலக மக்களை பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அந்த சிலையை காண பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். அதிலும், சிலையின் உள்பகுதியிலேயே சென்று தலையில் இருந்து நியூயார்க் நகரின் அழகை ரசிக்க முடியும்
அப்படிப்பட்ட அமெரிக்க சுதந்திர தேவியின் சிலை போன்றே, மாதிரி ரிப்ளிகா சிலையை பிரேசிலில் உள்ள போர்டோ அலிக்ரே மெட்ரோபொலிடன் நகரில் உள்ள கொய்பா பகுதியில் நிறுவியிருந்தார்கள்.
ஆனால், அங்கு பலத்த சூறாவளி காற்று வீசியதால், இந்த ரிப்ளிகா சிலை திடீரென ஒருபக்கமாக சாய்ந்தது. அப்படியே நின்றுவிடும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சூறாவளி காற்று சுழன்றடித்தது.
பலத்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சுதந்திர தேவியின் மாதிரி சிலை சரிந்து கீழே விழுந்தது. இதை அங்கு இருந்த மக்கள் அதிர்ச்சியுடன் செல்போன்களில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
https://x.com/BNODesk/status/2000670408018723177?s=20
