அனிமல் படத்தில் தான் நடித்த காட்சியை சமூக வளைதளங்களில் ரசிகர்கள் ட்ரோல் செயதது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

அண்மைக் காலங்களில் தென் இந்திய நடிகைகளில் அதிக கவனம் ஈர்த்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு , மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தின் மூலம் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். ஒரு பக்கம் பாராட்டுக்களைப் பெற்றாலும் மறுபக்கம் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ரன்பீர் கபூர் நடித்து கடந்த ஆண்டு 1000 கோடி வசூலித்த அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பை சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப் பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் அவர் பேசும் வசனம் நெட்டிசன்களாஸ் கேலி செய்யப்பட்டது. இது குறித்து நான்கு மாதங்கள் கழித்து தற்போது ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

9 நிமிட காட்சி

அனிமல் படத்தில் தான் ட்ரோல் செய்யப் பட்ட அந்த குறிப்பிட்ட காட்சியைப் பற்றி பேசிய ராஷ்மிகா மந்தனா “ அனிமல் படத்தில் நான் நடித்த அந்த காட்சி 9 நிமிடங்கள் நீளமுடையது. அந்த காட்சியை நான் நடித்து முடித்தபோது செட்டில் இருந்த அனைவரும் என்னை பாராட்டினார்கள். நான் உண்மையிலேயே நன்றாக நடித்திருப்பதாக நினைத்தேன். ஆனால் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் வந்த வெறும் 10 நொடிகளைப் பார்த்து ரசிகர்கள் என்னை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

செட்டில் எல்லாருக்கும் பிடித்திருந்த அந்த காட்சி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டதும் நான் சங்கடமாக உணர்ந்தேன். உண்மையில் அந்த காட்சியில் என்ன நடந்திருக்கிறது என்பது பற்றி எதுவும் தெரியாமல் ரசிகர்கள் என்னை விமர்சிக்கும் போதுதான் நான் உண்மையில் அவர் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நினைத்தேன். ரசிகர்களுடன் உரையாடி இதை தெளிவுபடுத்திக் கொள்ள நினைத்தேன்” என்று அவர் பதில் சொன்னார்.

மேலும் அனிமல் படம் பெண்களுக்கு எதிரான படம் என்று வந்த விமர்சனங்கள் குறித்து பேசியபோது “ அது ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய படம். தனது அப்பாவின் அன்பிற்காக அந்த கதாபாத்திரம் எந்த எல்லைவரை வேண்டுமானால் செல்லும் என்பதே அந்த படம். அது ஒரு படம் மட்டுமே. எந்த விதமான சாயலும் இல்லாமல் நேர்மையாக ஒரு படம் இருக்க வேண்டுமானால் அது அப்படி தான் இருக்கும்” என்றும் ராஷ்மிகா கூறியுள்ளார்.

புஷ்பா 2

ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ராஷ்மிகாவுக்கு படக்குழு சார்பாக புஷ்பா 2 படத்தில் இருந்து சிறப்பு ஃபோஸ்டர் ஒன்று வெளியானது . வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது.