Rajini, who is tense due to political question Lyricist Thirumaran passes away Cinema headlines | Cinema Headlines :அரசியல் கேள்வியால் டென்ஷனான ரஜினி..பாடலாசிரியர் திருமாறன் காலமானார்


Actor Vishal: மோடியா, ராகுல் காந்தியா.. 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு? விஷால் கணிப்பு இதுதான்!
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு “கண்டிப்பாக தொங்கு சபை இருக்காது, ஒரு கட்சிக்கு மிகப்பெரும் வெற்றி இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள். நான் யாருக்கும் பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் ஓட்டுப்போட்டுவிட்டு நான் கண்டிப்பாக அதுபற்றி சொல்வேன். கேப்டனுக்கு ஓட்டு போட்டு விட்டு அவருக்கு தான் ஓட்டு போட்டேன் என்று நான் ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அப்படி இந்த முறையும் ஓட்டுபோட்ட பிறகு சொல்றேன்.மேலும் படிக்க
Rajinikanth: அரசியல் கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் – டென்ஷனான நடிகர் ரஜினிகாந்த்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்குன்னு கேள்விப்பட்டேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால் லைகா நிறுவனம், இயக்குநர் ஐஸ்வர்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது பாராட்டிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நடிகர்கள் எல்லாருமே அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். முதல்வர் பதவி என்பது அவ்வளவு எளிதானதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘சாரி.. அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம்’ என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.  மேலும் படிக்க
“லால் சலாம்” வெற்றி…திருவண்ணாமலை கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
விஷ்ணு  விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90-களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் நேற்று காலை வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.மேலும் படிக்க
Vijay : அரசியலுக்கு வந்தா சம்பாதிக்கலாம் என்கிற நோக்கம் விஜய்க்கு இல்லை – ஒய்.ஜி மகேந்திரன்
”விஜய் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். சினிமாவில் நிறைய சம்பாதிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவது அவரது  நல்ல நோக்கத்தையே காட்டுகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்.ஜி.ஆரை பின்பற்றவேண்டும். அரசியலுக்கு வந்ததும் சினிமாவை கைவிட்டார் எம்.ஜிஆர். ஜெயலலிலாவும் அப்படிதான் செய்தார். தற்போது விஜயும் அரசியலுக்கு வந்ததும் சினிமாவை விட்டுவிடுவதாக கூறியிருப்பது ஒரு நல்ல அறிகுறி. மேலும் படிக்க
Lyricist Thirumaran : ‘சுதந்திர தேசமே வந்தே மாதரம்’ பாடலின் பாடலாசிரியர் திருமாறன் காலமானார்… திரைத்துறையினர் அதிர்ச்சி! 
பாடலாசிரியராக, உதவி இயக்குநராக தன்னை திரைத்துறையில் நிலைநிறுத்தி கொள்ள போராடிய திருமாறன் உடல் நல குறைவால் காலமானார். இந்த செய்தி திரைதுறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link