ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆறு ஏழை ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவச தானியங்களை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாள் உச்சிமாநாடு நடைபெற்றது. உச்சிமாநாட்டின் முக்கிய உரையில், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு தானியங்களை அனுப்புவதாக புடின் உறுதியளித்தார். வரும் மாதங்களில் புர்கினா பாசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு 25,000 முதல் 50,000 டன் தானியங்களை இலவசமாக வழங்குவதாக கூறினார்.
உக்ரைனைக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் அனைத்து போர் உபகரணங்களையும் வழங்கி வரும் சூழலில், உக்ரைனிடம் தானியங்களை பெறும் நாடுகளை ரஷ்யா தன்பக்கம் இழுத்துள்ளது.
மேலும், ரஷ்யாவுக்கு ஆதரவாக பல ஆப்பிரிக்க நாடுகள் இருப்பதால் மேற்கத்திய நாடுகள் அடுத்து என்ன செய்வது என்பதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.