prithviraj aadu jeevitham movie collects 50 crore at global box office


ஆடு ஜீவிதம்
பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் – தி கோட் லைஃப் (The Goat Life) படம் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியாகியது. பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் 1724 திரையரங்குகளில் இப்படம் வெளியான நிலையில், முதல் நாளே இப்படம் உலகம் முழுவதும் வசூலைக் குவித்தது. மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு ஆகிய மலையாளப் படங்கள் இந்த ஆண்டு அதிகம் வசூலித்து, மலையாள சினிமா உலகில் புதியதொரு கதவைத் திறந்துவைத்துள்ளன.
பொதுவாக கண்டெண்ட்டுக்காக பேசப்படும் மலையாளப் படங்கள் தற்போது வசூல் வேட்டையையும் தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் பல ஆண்டு எதிர்பார்ப்புடன் மலையாள சினிமாவில் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு படமாக்கப்பட்டுள்ள ஆடுஜீவிதம் திரைப்படமும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
50 கோடி வசூல்
இந்நிலையில், ஆடு ஜீவிதம் படம் எதிர்பார்த்தபடி உலகளவில் முதல் நாளில் மட்டும் ரூ.16.7 கோடிகளை வசூலித்ததாக படக்குழு தகவல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ,50 கோடிகளை ஆடு ஜீவிதம் வசூலித்துள்ளது.  

#Aadujeevitham #TheGoatLifeInCinema@DirectorBlessy @benyamin_bh @arrahman @Amala_ams @Haitianhero @rikaby @resulp @iamkrgokul @HombaleFilms @AAFilmsIndia @PrithvirajProd @RedGiantMovies_ @MythriOfficial @Magic_Frames @ListinStephen pic.twitter.com/oJFlpzN5gW
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 31, 2024

இத்தகவலை நடிகர் பிருத்விராஜ் மகிழ்ச்சியுடன் தன் இணைய பக்கத்தில் அறிவித்துள்ளார். மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் இப்படம் மூன்று நாள்களில் 50 கோடிகளை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படமான நாவல்
கடந்த 2008ஆம் ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் பிளெஸ்ஸி அறிவித்தார். இந்தப் படத்தின் காட்சிகளை நிஜ பாலைவனத்திற்கு சென்று படமாக்க வேண்டும் என்றும் இயக்குநர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அன்றைய சூழலில் மலையாள சினிமாவின் பொருளாதார நிலையால் இந்தப் படத்தை எடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக இருந்தன என்றும் இந்தப் படத்தை தாங்கள் நினைத்தபடி எடுப்பதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டதாகவும் நடிகர் பிருத்விராஜ் கூறியிருந்தார். இந்நிலையில் 16 ஆண்டுகள் திட்டமிடலுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க: Daniel Balaji: நான் ரசிக்கும் கலைஞன்.. டேனியல் பாலாஜி நடிப்பைப் பார்ந்து மெய்மறந்து சேரன் செய்த செயல்!
Daniel Balaji: “கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை” – மனமுடைந்த பேசிய பத்து தல இயக்குநர்!
 

மேலும் காண

Source link