Pothys: போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார் காலமானார்!

போத்தீஸ் நிறுவனர் காலமானார்

ஶ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து ஜவுளித் தொழிலைத் தன் தோளில் சுமந்து ஆரம்பித்து, திருநெல்வேலியில் போத்தீஸ் எனும் ஜவுளிக்கடையைத் தொடங்கி பின்னர் 2000களில் சென்னையில் தடம்பதித்து இன்று தமி்ழ்நாட்டின் பல ஊர்களிலும் அண்டை மாநிலங்களிலும் ஜவுளி சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்க அடித்தளமிட்ட போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார் (84)  இன்று காலை சென்னையில் காலமானார்.

இவரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஶ்ரீவில்லிப்புத்தூரில் நாளை நடைபெறுகிறது. சடையாண்டி மூப்பனார் மறைவால் இழந்து வாடும் மகன்களும், போத்தீஸ் நிறுவன உரிமையாளர்களான எஸ்.ரமேஷ், எஸ்.போத்திராஜ், எஸ்.முருகேஷ், எஸ்.மகேஷ், எஸ்.கந்தசாமி, எஸ்.அசோக் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த கே.வி.பி.சடையாண்டி மூப்பனார்?

சாதாரண ஏழை நெசவு தொழில் செய்த சாலியர் இனத்தில் பிறந்த K.V. போத்திமூப்பனார் சுமார்  1946 ஆம் ஆண்டு முதல் சைக்கிளில் தெருத்தெருவாக ஜவுளி வியாபாரம் செய்தவர். இவர் கலசலிங்க மூப்பனாரின் பேரனும், வைத்திலிங்க மூப்பனாரின் மகனாவார். போத்தி மூப்பனார் சன் அன் கோ என்ற பெயரில் தனது ஜவுளித் தொழிலை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகில் 1949ல் கடை வைத்து ஆரம்பித்தார்.

அவரின் ஒரே மகன் சடையாண்டி மூலம் 2வது தலை முறையாகவும், 6 பேரன்களான ரமேஷ்,  போத்திராஜ், முருகேஷ், கந்தசாமி, மகேஷ், அசோக் மூலம் மூன்றாம் தலைமுறையாகவும் இந்த 6 பேரன்களின் வாரிசுகளான கொள்ளு பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் மூலம் நான்காவது தலைமுறையாகவும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது.

முதல் தலைமுறையால் சுமார் 1949ல் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்டில் முதல் கடை, மகன் சடையாண்டி மூப்பனார் 1977ல் ஆண்டாள் கோயில் அருகில்  இரண்டாவது கடை, ரமேஷ் மற்றும் சகோதர்களால் 1986 ல் திருநெல்வேலியில் 3வது கடை, படிப்படியாக படர்ந்து சென்னை,மதுரை, கோவை, திருவனந்தபுரம், பாண்டிச்சேரி, நாகர்கோயில், திருச்சி, பெங்களூர், சேலம் என 11 ஊர்களில் 16 கடைகளாக விரிவடைந்துள்ளது.

அடுத்த 17 வது கடை கொச்சினில் ( எர்ணாகுளம்).  இந்த வளர்ச்சி என்பது ஈடுபாடு கொண்ட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, உறவுகளின் விசுவாச உழைப்பும் ,பணியாளர்களின் உழைப்பும், இந்த இமாலய வெற்றிக்கு பங்கு உண்டு.  போத்தீஸ் சாம்ராஜ்யத்தின் முதல் மன்னர் போத்தி மூப்பனாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டித்தெரு தான் சொந்த தெரு. அந்த தெருவில் இவரது பூர் வீக வீடு உள்ளது.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஊழியர் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்தாலும் கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்வது வாடிக்கை. ஸ்ரீவில்லிபுத்தூரில்  திருமணம் என்றால் கண்டிப்பாக சடையாண்டி -வேலம்மாள் இருவரும் இணைந்து கலந்து கொள்வார்கள். இப்படி தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து எண்ணற்ற குடும்பங்களுக்கு வாழ்வு கொடுத்தார் சடையாண்டி மூப்பனார்.

Source link