2024ம் ஆண்டில் புத்தாண்டு முடிந்து பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.
விழா
தேதி
நாள்
புத்தாண்டு தினம்
ஜனவரி 1
திங்கட்கிழமை
பொங்கல்
ஜனவரி 15
திங்கட்கிழமை
திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16
செவ்வாய்
உழவர் திருநாள்
ஜனவரி 17
புதன்
தைப்பூசம்
ஜனவரி 25
வியாழன்
குடியரசு தினம்
ஜனவரி 26
வெள்ளி
பொங்கல் 2024: அறுவடையைக் கொண்டாடும் பண்டிகை
பொங்கல் என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை ஆகும். அதிலும், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் வரும் ’பொங்கல்’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பானது தை மாதத்தின்போது அறுவடை செய்து கடவுளுக்கு படைக்கப்படும். அதையே விவசாயிகள் மிகவும் விமரிசையாக கொண்டாடி தீர்ப்பார்கள்.
மகர சங்கராந்தியைப் போலவே இந்த பண்டிகையும் சூரியன் வழிப்படும் நாளாகும். தை மாதத்தில் பயிர் அறுவடை செய்யப்பட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 18-ஆம் தேதி நிறைவடைகிறது.
பொங்கலின் நான்கு நாட்கள் – போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல்.
பொங்கல் பண்டிகை:
பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி 18ஆம் தேதி நிறைவடைகிறது. போகி பண்டிகை ஜனவரி 15, தை பொங்கல் ஜனவரி 16, மாட்டுப் பொங்கல் ஜனவரி 17 மற்றும் காணும் பொங்கல் ஜனவரி 18 அன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தில் இருந்து தமிழ் புத்தாண்டு தொடங்கும் என்பது நம்பிக்கை. ஆனால், தமிழ் வருடப்படி சித்திரை மாதமே முதல் மாதமாக கருதப்படுகிறது.
பொங்கல் கொண்டாடுவது எப்படி?
பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நடைபெறும். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி, நெருப்பு மூட்டி இந்திரனை வணங்குகிறார்கள்.
பொங்கலின் இரண்டாம் நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதுதான் தைப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சூரியதேவரை விவசாயிகள் வணங்கி, பாரம்பரிய உணவான சர்க்கரை பொங்கலுடன் கொண்டாடப்பட்டது. பயிர்களுக்கு சூரியபகவான் தனது ஆசீர்வாதத்தை வழங்குவார் என்று நம்பப்படுகிறது.
பொங்கலின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில், கால்நடைகளை அலங்கரித்து வழிபாடு செய்து, அவை பயிர்களை உழுவதற்கு பயன்படுவதால், அவற்றைப் தெய்வமாக வணங்குகின்றனர்.
பொங்கலின் நான்காவது மற்றும் கடைசி நாள் காணும் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். இந்நாளில் கரும்பு வைத்து பால், அரிசி, நெய் போன்றவற்றில் இருந்து உணவுகள் தயாரித்து சூரியபகவானுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.