எக்ஸ் தளத்தில் சாதித்த பிரதமர் மோடி… 100 மில்லியனை கடந்த ஃபாலோயர்ஸ்…

பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தை ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கை 100 மில்லியன், அதாவது 10 கோடி பேரை கடந்துள்ளது.

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். எனினும், எக்ஸ் தளம் ஏற்கனவே இருந்த‍து போலவே செயல்பட்டு வருகிறது.

இதில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், ஊடகங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களுக்கு என்று பக்கத்தை உருவாக்கி, கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய பிரதமர் மோடி, நரேந்திர மோடி என்ற பெயரில் எக்ஸ் சமூக வலைதளத்தில் பக்கம் வைத்துள்ளார். 2009ஆம் ஆண்டு பிரதமர் மோடி டிவிட்டரில் இணைந்த‍தில் இருந்து அதிகமானோர் ஃபாலோ செய்து வந்தனர். தற்போது எக்ஸ் என பெயர் மாற்றிய பிறகும், தொடர்ந்து தன்னுடைய நிகழ்ச்சிகள், பயணங்கள், சந்திப்புகளை பதிவிட்டு வருகிறார்.

இதனால், பிரதமர் மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதன்படி, தற்போது பிரதமர் மோடியின் ஃபாலோயர்ஸ் கணக்கு 100 மில்லியனை கடந்துள்ளது. அதாவது, 10 கோடி ஃபாலோயர்ஸ் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

https://x.com/narendramodi/status/1812482830108426279

இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பிரதமர் மோடி, தொடர்ந்து எதிர்காலத்திற்காக பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், உலக அளவில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 7வது இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில், உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதனை, பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதிலும், பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.