Passports: விசா இன்றி செல்ல உதவும் பவர்ஃபுல் பாஸ்போர்ட்டு: பரிதாப நிலையில் இந்தியா! மாலத்தீவோட மோசம்!

வெளிநாடு பயணம் மட்டுமின்றி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு உங்கள் அடையாளச் சான்று ஆவணமாகவும் பாஸ்போர்ட் செயல்படும். எனவே, ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவையான பாஸ்போர்ட்டை பெற்று கொள்வதும், அது காலாவதி ஆனதும் புதுப்பித்து கொள்வதும் அவசியமான ஒன்று.

பிரான்ஸ் நாடு முதலிடம்:

இந்த நிலையில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நாடு முதலிடம் பெற்றுள்ளது. எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவித்திருக்கிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

இந்த குறியீடானது 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை மதிப்பீடு செய்து வெளியிடுகிறது. அதன்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளைத் தொடர்ந்து பின்லாந்து, நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாட்டின் பாஸ்போர்ட்கள் சக்தி வாய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. மேற்கண்ட நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணிக்கலாம் அல்லது சில நாடுகளுக்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியா எந்த இடம்?

இந்தியாவை பொறுத்துவரை சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியில் 85வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 62 நாடுகளுக்கு பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம். மாலத்தீவு, சீனா ஆகிய நாடுகளை விட தரவரிசை பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்கா 55வது, மாலத்தீவுகள் 58வது, சவூதி அரேபியா 63வது, சீனா 64வது, தாய்லாந்து 66வது, இந்தோனேஷியா 69வது, உஸ்பெகிஸ்தான் 84வது இடத்தில் உள்ளன.  கடந்த ஆண்டு தரவரிசை பட்டியலில் 84வது இடத்தில் இருந்த இந்தியா, இந்தாண்டு  85வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 106வது இடத்திலும், இலங்கை 101வது இடத்திலும், வங்கதேசம் 102வது இடத்திலும், நேபாளம் 103வது இடத்திலும் உள்ளன.

மற்ற நாடுகளின் நிலவரம்:

உலகில் மிகவும் புலம்பெயர்ந்தோர் நாடுகளில் ஒன்றான கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் செக் குடியரசு ஆறாவது இடத்தில் உள்ள நிலையில், 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.  அதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா 55வது இடத்திலும், மாலத்தீவுகள் 58வது இடத்திலும், சவூதி அரேபியா 63வது இடத்திலும், சீனா 64வது இடத்திலும், தாய்லாந்து 66வது இடத்திலும் உள்ளன.

இதனை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நார்வே மற்றும் போர்ச்சுகல் நான்காவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளில் விசா இல்லாமல் 191 நாடுகளுக்கு பயணிக்கலாம். ஆஸ்திரேலியா, கிரீஸ், மால்டா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து 5வது இடத்தில் உள்ள நிலையில், 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தான் 109வது இடத்தில் உள்ள நிலையில், 28 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link