சினிமா, தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த நிலை மாறி, ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மக்களை எந்த நேரமும் போனும் கையுமாக சுற்றவைத்துள்ளது இன்றைய டெக்னாலஜி. அதிலும் யூடியூப் மூலம் இப்போது சாமானிய மக்களும் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
அப்படி யூடியூப், டிக் டாக் மூலம் பிரபலமான பலரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு யூடியூபராக இருந்து சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று இன்று ஒரு பிரபலமான செலிபிரிட்டியாக இருப்பவர் சரவண விக்ரம்.
யூடியூப் மூலம் பிளாகிங், சமையல் மற்றும் டிராவல் வீடியோக்களைப் பகிர்ந்து வந்த சரவண விக்ரமுக்கு ஏராளமான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் – தம்பிகளில் கடைக்குட்டி தம்பி கண்ணனாக சரவண விக்ரம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
அந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அவரை மையப்படுத்தி கதைக்களத்தில் சில போர்ஷன் அமைக்கப்பட்டு இருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன்னுடைய ரீல் ஜோடியான விஜே தீபிகாவுடன் இணைந்து ஏராளமான ரீல்ஸ் எல்லாம் போஸ்ட் செய்து இருந்தார். சரவண விக்ரமுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக என்ட்ரி கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஏராளமான ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளானார். அதிகமாக மிக்சர், காமெடி பீஸ், டைட்டில் வின்னர் விக்ரம் என்றெல்லாம் ட்ரோல் செய்யபட்டார்.
பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் 84 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சோசியல் மீடியாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்த சரவண விக்ரம் தற்போது ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் சரவண விக்ரமுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தலை நிறைய முடியும் தாடியுமாக பார்க்கவே மிகவும் வித்தியாசமாக, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார் சரவண விக்ரம். சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்தமான நடிப்புத்தொழில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்து பின்னர் அவரே அதை டெலீட் செய்தார்.
இப்படி அவர் போட்டோஸ் போஸ்ட் செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே அவர் இனி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் அவரின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
மேலும் காண