வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைபற்றியுள்ளது.
கோட்
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்ஷி செளதரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தந்தை மகன் என இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மேலும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக இப்படத்தின் டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.
Our Thalapathy is the Greatest Of All Time 🔥🔥🔥🔥#GreatestOfAllTime #Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @thisisysr @actorprashanth… pic.twitter.com/SOgQSGHXEF
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
கோட் படத்தின் முதல் இரண்டு ஷெட்யூல் முடிந்துள்ள நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. முன்னதாக தாய்லாந்து, இலங்கை, இஸ்தான்புல் , சென்னை , ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்தகட்டமாக ரஷ்யா மாஸ்கோவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
ஓடிடி ரிலீஸ்
கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கில் வெளியாவதைத் தொடர்ந்து கோட் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும். இப்படத்தினை பெரும் தொகைக்கு நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தளபதி 69
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். ஏற்கனவே தான் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக இருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார். கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் , ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. விஜய் அரசியலுக்கு வருவதால் இந்தப் படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க : Manjummel Boys: கண்மணி அன்போடு.. மஞ்சுமெல் பாய்ஸ் பார்த்து சிலிர்த்துப் போன கமல்ஹாசன்!
Thalapathy 69: விஜய்யை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? – தளபதி 69 படம் பற்றி வெளியான அப்டேட்!
மேலும் காண