<p>மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது. அதன் பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “ பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்றார். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் ஏமாற்றி வருகின்றார். பாஜக என்பது கழற்றிவிடப்பட்ட பெட்டி. அண்ணே! அண்ணே! என்று அண்ணாமலைபோல் நாங்கள் கூழைக்கும்புடு போடமாட்டோம்” எனக் கூறியுள்ளார். </p>