MK Stalin: தமிழ்நாட்டை வஞ்சிக்காத மத்திய அரசு வேண்டும்


நான் முதல்வன் திட்டத்திற்கு அனிதான் அச்சீவர்ஸ் அகாடமியே அடிதளம் என கொளத்தூரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “ மகளிர் தினத்திற்கு மகளிருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பெண்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்தவே மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொளத்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் எதுவும் இல்லை. மாநில அரசை வஞ்சிக்காத மத்திய அரசு வேண்டும். காலம் கனிந்து வருகின்றது. தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என பேசியுள்ளார். 

மேலும் காண

Source link