<p>மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மக்களவைத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நெத்தியில் இன்று இவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெத்தியில் இருந்து முகம் முழுவதும் ரத்தம் வழிய மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
Mamata Banerjee: முகம் முழுவதும் ரத்தம்! மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி!



