Maldives Parliamentary Elections: மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் புதிய ட்விஸ்ட்.. அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி..!

‘மஜ்லிஸ்’ எனப்படும் 93 உறுப்பினர்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) 86 இடங்களில் 66 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

மஜ்லிஸ் என்றால் என்ன..?

மக்கள் மஜ்லிஸ் என்பது மாலத்தீவின் ஒருசபையை கொண்ட சட்டமன்ற அமைப்பாகும். மாலத்தீவின் அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டங்களை இயற்றவும், திருத்தவும் மஜ்லிஸுக்கு அதிகாரம் உள்ளது.

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்:

மாலத்திவீன் 20வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, 93 தொகுதிகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கிட்டதட்ட 66 இடங்களில் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியது. இது நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றாலும், பிஎன்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் எட்டு இடங்கள் மட்டுமே இருந்தன.

இதையடுத்து, தற்போதைய  தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த எம்.டி.பி.க்கு பெரும் அடியாக அமைந்ததுடன், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத முயிஸ்ஸூவின் அரசுக்கு பலம் அளிக்கிறது.

முகம்மது முய்சு:

இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, முகமது முய்சுவின் பிஎன்சி மற்றும் அதன் கூட்டணி  கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, முய்சு விரும்பிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் எளிதாக கொண்டு வர முடியபில்லை. முய்சு எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், எதிர்க்கட்சிகளின் தலையீட்டால் அது முடக்கப்பட்டது. இந்தநிலையில், 66 இடங்களில் தற்போது முய்சுவின் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற சூழ்நிலையில், அவர் நினைத்த சட்டங்களை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து, சீனாவுடன் நெருங்கி பழகி வந்தவர்தான் இந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்த வெற்றிக்கு பிறகு முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகளவில் அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவு 800 கிலோமீட்டர் தொலைவில் 1192 சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 2,84,663 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற தேர்தலில் 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்திய எதிர்ப்புக்கு ஆதரவா?

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் கட்சியான பிஎன்சியின் மகத்தான வெற்றி, அதிபரின் பதவிக்கு ஆதரவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்த காய் நகர்த்திய முய்சுவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்தியப் படைகள் தீவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தெரிவித்திருந்தார். முய்சுவின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரிக்கவில்லை.

தான் அதிபரான பிறகு இந்திய ராணுவம் தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று முய்சு கோரினார். தொடர்ந்து, இதுகுறித்து நாடாளுமன்ற தேர்தலில் முய்சு பிரச்சாரமும் செய்தார். அதன் தொடர்ச்சியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பிறகும், சமீபத்தில் இந்தியாவை விமர்சித்து வந்த முய்சு, இந்தியா நெருங்கிய நண்பராக இருக்கும் என்று கூறி ஆச்சரியம் அளித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பிஎன்சி உறுப்பினர் மரியம் ஷிவுனா உட்பட இரண்டு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் .

Source link