வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜோசப், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேருவார் என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கலக்கிய ஷமர்:
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். ஸ்மித் ஓப்பனராக இறங்கிய முதல் போட்டியிலேயே ஷமரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். தொடர்ந்து ஸ்டார்க், லயான் ஆகியோர்களையும் முட்டி மோதி வீழ்த்தி அறிமுகப் போட்டியிலேயே அதிலும் ஆஸ்திரேலியாவில் வைத்து ஐந்து விக்கெட்டை வீழ்த்தினார் ஷமர்.
அதேபோல், முதல் இன்னிங்ஸில் 36 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எடுத்துக்கொடுத்தார். முதல் போட்டியில் 20 ஓவர்கள் வீசிய இவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் யார்க்கர் பந்துவீச்சு, ஷமர் ஜோசப்பின் காலை பதம் பார்த்தது. இதனால், அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை வாரி சுருட்டினார். அதன்படி, 11 ஓவர்கள் மட்டுமே வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
வுட்-க்கு பதில் ஷமர் ஜோசாப்:
SALARY OF SHAMAR JOSEPH IS 3 CRORE IN IPL 2024. – He will play under KL Rahul in LSG. pic.twitter.com/ZyGSQ1tyjI
— Johns. (@CricCrazyJohns) February 10, 2024
கரீபியனில் உள்ள பராகரா என்ற கிராமத்தில் பிறந்து கூலித்தொழிலாளியாக வேலையைத் தொடங்கியவர். பின்னர் செக்யூரிட்டியாக 12 மணி நேர ஷிஃப்டில் பணியாற்ற அங்கிருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர், ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணத்தில் முதன் முறையாக இடம்பிடித்து காபா டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சாதனையின் நாயகான மிளிர்ந்தார்.
இந்நிலையில் தான் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைய இருக்கிறார். இவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் மார்க் வுட் 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Fitness Icon Anil Kadsur: மாரடைப்பால் மரணமடைந்த ஃபிட்னஸ் நிபுணர் அனில் கட்சூர்.. என்ன ஆச்சு?
மேலும் படிக்க: IND vs ENG Tests: 13 வருடத்தில் முதல்முறை! முழு டெஸ்ட் தொடரில் விளையாடாத விராட்கோலி!
மேலும் காண