Lok Sabha Election 2024 D Raja says Modi is losing his temper in desperation because BJP will suffer a massive defeat – TNN | பாஜக படுதோல்வி ஏற்படும் என்பதால் தான் மோடி விரக்தியில் நிதானம் இழந்து பேசி வருகிறார்


விழுப்புரம்: தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை வந்தாலும் பாஜகவால் இங்கு கால் ஊன்ற முடியாது என்றும் வட மாநிலங்களில் பாஜக படுதோல்வி ஏற்படும் என்பதால் தான் மோடி விரக்தியில் நிதானம் இழந்து பேசி வருவதாகவும் எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சி என்று சொல்லும் மோடி ஊழல் கட்சியே பாஜக தான் என டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
தமிழத்தில் இண்டியா கூட்டணியிலுள்ள கட்சிகளை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜா தமிழகத்தில் வாக்குசேகரிப்பிற்காக சென்னை வந்துள்ள மோடி அவர் தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலூம் பாஜகவால் இங்கு காலுன்ற முடியாது என்றும் பெரியார், அம்பேத்கர் பிறந்த மண்ணில் பாசிசத்திற்கு வேலை இல்லை என்றும் தமிழ்நாட்டில் பாஜகவின் கோப அலை வீசுவதாகவும் பாஜக ஆட்சி நீடிக்க கூடாது அப்படி நீடித்தால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என தெரிவித்தார்.
 
சுதந்திரத்தை பாதுக்காக்க வேண்டுமானல், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமானால், இன்று நாடு முழுவது பாஜக எதிர்ப்பு எழுந்துள்ளதால், மோடி நிதானம் தவறி பொய்யை பேசி வருவதாகவும் மோடி ஆட்சியில் பொய்களை பரப்பியே செயல்படுவதால் மக்கள் அதனை நம்பாமல் பாஜக வையும் ஆர்.எஸ்.எஸ். ஐ யும் அகற்ற மக்கள் தயாராகி விட்டதாக கூறினார். வட மாநிலங்களில் பாஜக விற்கு படுதோல்வி ஏற்படும் என்பதால் தான் மோடி விரக்தியில் நிதானம் இழந்து பேசி வருவதாகவும் எதிர்கட்சிகளை ஊழல் கட்சி என்று மோடி சொல்கிறார் ஆனால் இன்று ஊழல் கட்சியே பாஜக தான் என குற்றஞ்சாட்டினார்.
 
தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பணம் 4 கோடி பறிமுதல் செய்துள்ளனர் இதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு இல்லாமல் சுதந்திர மாக செயல்பட வேண்டும் என்றும் இன்று சென்னைக்கு வந்துள்ள மோடி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பணம்  4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து பதில் சொல்ல வேண்டும் என கூறினார். பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக நாட்டை மதவாத நாடாக மாற்றுவதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் பட்டினி எண்ணிக்கை அதிகரித்து வேலை வாய்ப்பு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி பாஜகவை அகற்ற தீவிரமாக உள்ளதாகவும் இந்தியா கூட்டணியை மக்கள் ஆதரிப்பதகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரவேற்பதாக தெரிவித்தார். 
 
மார்க்ஸ் கெடுதல் செய்துவிட்டதாக ஆளுனர் ரவி பேசுகிறார் அவர் என்னவோ மார்க்ஸ் ஐ கரைத்து குடித்து படித்தது போல் பேசுவதாகவும் மோடி அரசின் ஏஜெண்டாக தான் ஆளுனர் ரவி பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்து கொண்டு அதானி, அம்பானியோடு கூட்டு வைத்துள்ள பாஜக வோடு அணி சேர்ந்துள்ள ராமதாஸிடம் பாமகவின் கொள்கை என்ன என்று கேட்க வேண்டுமென கூறினார். 
 
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் அணி என்பது கொள்கையான அணி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்வதாகவும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது ஒரு பிரச்சனையே இல்லை பாஜக வை அகற்றுவது தான் எங்கள் நோக்கம் என கூறினார். பாஜகவில் மோடிக்கு அடுத்தது யார் என்று அவர்களால் சொல்லமுடியாது, பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்றால் நாங்கள் ஜெயித்துவிட்டோம் என்று அவர்களே ஒப்புக்கொள்வதை தான் காட்டுவதாக டி.ராஜா தெரிவித்துள்ளார். 
 
 
 

மேலும் காண

Source link