சமீபகாலமாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் நாடு முழுவதும் பெரும் விவாத்தை கிளப்பி வருகிறது. பாஜகவினர் சொல்லும் இடம் எல்லாம் இந்த கோஷத்தைதான் பயன்படுத்துகின்றனர். பிரதமர் தொடங்கி கடைக்கோடி தொண்டர் வரை, இந்த கோஷத்தைதான் எழுப்புகின்றனர்.
‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தின் வரலாறு:
தான் எழுப்புவது மட்டும் அல்லாமல் மற்றவர்களும் இந்த கோஷத்தை எழுப்ப வேண்டும் என பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாக அவ்வப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை எழுப்ப விருப்பப்படாதவர்களை தேச விரோதி போன்று கட்டமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த விவகாரத்தில் பாஜகவை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை இஸ்லாமியர் ஒருவர் அறிமுகப்படுத்தியதால் அதை சங் பரிவார் அமைப்புகள் கைவிட்டு விடுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த பேரணியில் நேற்று கலந்து கொண்டு பேசிய கேரள முதலமைச்சர், “‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர் அசிமுல்லா கான் என்ற முஸ்லீம்.
பாஜகவுக்கு பாடம் எடுத்த கேரள முதலமைச்சர்:
சங்பரிவார் ஆதரவாளர்களுக்கு இது தெரியாது. அந்த முழக்கம் ஒரு இஸ்லாமியரால் அறிமுகப்படுத்தியது என்பதற்காக அவர்கள் அதை கைவிடத் தயாரா?” என்றார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்ட வீரர்கள் நடத்திய முதல் கிளர்ச்சி இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர் ஆதும். இந்த போரில் வியூக அமைப்பாளராக இருந்தவர் அசிமுல்லா கான். கடந்த 1857ஆம் ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக தாய்நாடு வேண்டும் என குரல் கொடுத்து, ‘மதர் – இ – வதன் பாரத் கீ ஜெய்’ என முழக்கமிட்டவர் அசிமுல்லா கான்.
இந்த வரலாற்றை மேற்கோள் காட்டி பேசிய பினராயி விஜயன், “இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற பார்வையை சங் பரிவார் அமைப்புகள் கொண்டுள்ளன. இந்த இலக்கை அடைய அவர்கள் பல திட்டத்தை வகுத்து வருகின்றனர்” என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியும் அமைத்து காத்து வருவதாக கேரள முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா.. கொதித்தெழுந்த இந்தியா.. என்னதான் பிரச்னை?
மேலும் காண