காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி எம்எல்ஏ காட்டிய பேனரால், பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, பிடிபி எம்எல்ஏ திடீரென ஒரு பேனரை கையில் ஏந்திக்கொண்டு சென்றார். காஷ்மீரில் இருந்த சிறப்புச் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட அந்த பேனரை பார்த்ததும், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர்.
இதனால், காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து முழக்கங்களை எழுப்பினர். பாரத் மாதா கி ஜே என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பிடிபி எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக் சட்டப்பேரவையில் இருந்து உடனே வெளியேற்றப்பட்டார்.
https://x.com/ANI/status/1854749347059319057
அதே நேரத்தில், பாஜக எம்எல்ஏக்கள் அவைத்தலைவர் இருக்கும் இடம் நோக்கி சென்று மேலே ஏற முயன்றதால், அவர்களையும் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
https://x.com/ANI/status/1854750858879418540
பிடிபி எம்எல்ஏ மற்றும் பாஜக எம்எல்ஏக்களால் சட்டப்பேரவை கூட்டம் பரபரப்பானதாக மாறியது.