Karur Vishwakarma Siddhi Vinayagar Temple Balamurugan Abhishekam – TMM | கரூரில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு அழகன் பாலமுருகனுக்கு ராஜா அலங்காரம்


கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தின் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் அழகன் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாசி மாத கிருத்திகை முன்னிட்டு கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணைக் காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரம் செய்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அழகன் பாலமுருகன் காட்சி அளித்தார்.
 
 

அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் பாலமுருகனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டினார். தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்த் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
 
கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சி.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள் நிகழ்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.
 

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.
அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா  தீபாராதனை நடைபெற்றது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக சுவாமி வெள்ளி கருட வாகன சேவையில் காட்சி அளித்ததை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் காண

Source link