Karur minister should go to Tihar Jail BJP Annamalai warns – TNN | மீண்டும் டோக்கன் கொடுக்க முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும்


இலவச டப்பா, வெள்ளியே இல்லாத கொலுசு, டோக்கன் கொடுக்க மீண்டும் முயற்சித்தால் கரூர் அமைச்சர் திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும் என பாஜக அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.
 
 
 

கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் செயல் வீரர் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
 

 
இதில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் அறிக்கை ஒரு பொய் புத்தகம் என தெரிவித்து, தமிழக முழுவதும் திமுகவில் வாரிசுகள் தான் எம்பி வேட்பாளராக போட்டியிட்டு வருகின்றனர். பொய் வாக்குறுதி மட்டுமே கொடுத்த திமுகவினர், 90% வாக்குறுதி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் கூறுகிறார். வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
 
 

 
கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலவசமாக டப்பா கொடுத்ததாக பார்த்தேன், இது போன்று கொடுத்து தான் கரூர் அமைச்சர் சிறையில் இருந்து வருகிறார். மீண்டும் டப்பா கொடுப்பது வெள்ளியே இல்லாத கொலுசு கொடுப்பது டோக்கனை கொடுப்பது என இந்த வேலையில் ஈடுபட்டால் அவருக்கு திகார் சிறை தான்  என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
 
 
 

மேலும் காண

Source link